அம்பானி குடும்பத்தினர் ஆண்டுதோறும் தவறாமல் கொண்டாடும் ”ஆம் மனோரத்”

குஜராத்: முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தெய்வ பக்தி மிகுந்தவர்கள். அடிக்கடி இவர்கள் கோயில்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே போல வழக்கமாக கொண்டாடும் எந்த ஒரு பூஜையையும் இவர்கள் தவற விடுவதில்லை.

அப்படி ஆண்டுதோறும் இவர்கள் தவறாமல் கொண்டாடும் ஒரு பண்டிக்கை ஆம் மனோரத். மாம்பழத்தை அடிப்படையாக கொண்ட இந்த கொண்டாட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அம்பானி குடும்பத்தினர் ஆண்டுதோறும் தவறாமல் கொண்டாடும் ”ஆம் மனோரத்”


ஆம் மனோரத் கொண்டாட்டத்துக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையே தொடர்பு உள்ளது. கிருஷ்ண பக்தர்கள் இடையே பிரபலமானது இந்த மாம்பழ கதை. கிருஷ்ணர் கோகுலத்தில் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்த போது, மாம்பழம் விற்கும் ஒரு ஏழைப் பெண்ணை சந்திக்கிறார், அப்போது தானியங்களை வழங்கி அதற்கு மாற்றாக மாம்பழங்களை பெற்றுக் கொள்ளலாம் என கிருஷ்ணர் நினைக்கிறார்.

மாம்பழம் என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். எனவே தானியங்களை எடுப்பதற்காக வீட்டில் சென்று தேடிய போது அங்கே மிக குறைந்த தானியங்களே இருந்துள்ளன. அவர் அதனை கொண்டு சென்று மாம்பழம் விற்கும் பெண்ணிடம் கொடுத்துள்ளார். கிருஷ்ணரின் இந்த செயலையும் அப்பாவித் தனத்தையும் கண்டு நெகிழ்ந்த அந்த பெண், கிருஷ்ணரின் கைகள் நிறையும் அளவுக்கு மாம்பழங்களை வழங்கியுள்ளார்.

பின்னர் கிருஷ்ணர் தனது கைகளைத் திறந்ததும், அந்த மாம்பழங்கள் அனைத்தும் நகைகள் மற்றும் ஆபரணங்களாக மாறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் ஆம் மனோரத் கொண்டாடப்படுகிறது. அம்பானி குடும்பத்தினர் கிருஷ்ண பக்தர்கள் என்பதால் தவறாமல் இதனை ஆண்டு தோறும் கொண்டாடுகின்றனர். குறிப்பாக முதல் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்களை வைத்து பூஜை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானி ஆகியோர் அடிக்கடி ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். கோவிலின் சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக தங்களின் ஆன்டிலியா இல்லத்திலும் ஆம் மனோரத்தை கடைபிடித்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நீதா அம்பானியே நேரடியாக கண்காணிக்கிறார்.

அம்பானி குடும்பத்தினர் முதலில் அறுவடை செய்யும் மாம்பழங்களை கிருஷ்ணருக்கு காணிக்கையாக வழங்குகின்றனர். இதற்காக குஜராத மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் தோட்டங்களில் பிரத்யேகமாக மாம்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஆம் மனோரத் பூஜையின் போது ஆன்டிலியாவில் முழுவதுமாக மாம்பழங்களை கொண்டே அலங்காரம் செய்யப்படுகிறதாம். விளக்குகள் கூட மாம்பழ வடிவில் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். ஆண்டுதோறும் பிரம்மாண்டமான முறையில் அம்பானி குடும்பம் இந்த பூஜையை செய்கிறது. இந்த ஆண்டு அவர்களின் செல்ல மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற இருப்பதால் கொண்டாட்டங்கள் களைகட்டின. கடந்த பிப்ரவரி மாதம் இந்த பூஜை முடிவடைந்தது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+