பரிசுகள் என்று வந்துவிட்டால் அது எந்தளவுக்கு டாப்பாக இருக்க வேண்டும் என்பதை அம்பானிகளுக்குச் சொல்லி தர தேவையில்லை. பரிசுப் பொருளின் மதிப்பைப் பற்றி கேட்டாலே சொக்கிவிடுவர்.
எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் முகேஷ் அம்பானி குடும்பம் நிகர சொத்தாக 100.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்துள்ளது. உலகின் 13ஆவது பெரிய பணக்காரராகவும் முகேஷ் அம்பானி உள்ளார். எனவே அவர்களிடையே காஸ்ட்லியான பரிசுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு பெரிய விஷயமமே இல்லை. ஆனால் இதை பார்ப்பவர்களுக்கு தான் தலை சுற்றுகிறது.
முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும் கிளாசிகல் நடனக் கலைஞரும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநருமான ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதோடு புதிதாக பிறந்த 4 பேரக்குழந்தைகளும் அந்தக் குடும்பத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் அம்பானி குடும்பத்தில் உறுப்பினர்கள் தங்களுக்குள் தந்து கொண்ட வேடிக்கையான பரிசுகள் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முன்பாக முகேஷ் அம்பானி தனது மனைவி நீதா அம்பானிக்கு இந்தியாவின் மிக விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ச் எஸ்யூவி காரை பரிசளித்தார். இதன் மதிப்பு ரூ.10 கோடி(நீதாவுக்கு ஏற்றபடி செய்யப்பட்ட மாற்றங்களின் செலவு தனி).
நம் நாட்டில் நடிகர் ஷாரூக் கான் போன்று கைவிட்டு எண்ணும் அளவுக்கு மிகச் சிலர் தான் இந்தக் காரை வைத்துள்ளனர். ஷாரூக் கானின் கார் நிறம் டஸ்கான் சன் ஷேடு ஆரஞ்சு. இந்த எஸ்யூவி 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 இஞ்சின் பொருத்தப்பட்டு 600 ஹார்ஸ்பவருடன் 900 என்எம் உச்சபட்ச டார்க் சக்தியை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது.
2007 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி தனது மனைவி நீதா அம்பானிக்கு அவரது 44 ஆவது வயது பிறந்தநாள் பரிசாக ஏ319 ரக ஏர்பஸ் ஜெட்டை வாங்கித் தந்தார். இந்த விமானம் நீதா விரும்பியபடி உள்புற இன்டீரியர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரு அலுவலகம் மற்றும் ஒரு கேபினில் கேம் கன்ஸோல்கள், மியூசிக் சிஸ்டம், சாட்டிலைட் டிவி, வயர்லெஸ் கம்யூனிகேஷன், ஒரு மாஸ்டர் பெட்ரூம், பல வகையான ஷவர்கள் கொண்ட ஒரு பாத்ரூம், மூன் லைட்டிங் கொண்ட ஸ்கை-பார் போன்ற வசதிகளும் இந்த விமானத்தில் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரைவேட் ஜெட் விமானத்தின் விலை ரூ.240 கோடி ஆகும்.
2019 ஆம் ஆண்டில் ஷ்லோகா மேத்தாவும் ஆகாஷ் அம்பானியும் திருமணம் செய்துகொண்டபோது, நீதா அம்பானி தனது புதிய மருமகளுக்கு ரூ.451 கோடி வைர நெக்லெஸ் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து குடும்பத்துக்குள் வரவேற்றார். அந்த நெக்லெஸில் 91 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறைபாடே இல்லாத மௌவாவாட் எல் இன்கம்பாரபிள் வைரங்கள் 407.48 கேரட் மஞ்சள் நிற வைரங்கள் 229.52 கேரட் வெள்ளை நிற வைர நெக்லெஸில் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்த நெக்லெஸை சோத்பி ஷோரூமில் டிஸ்பிளே செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் சந்தையில் பார்க்க முடியவில்லை.
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் இந்த ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அவரது அண்ணன் ஆகாஷ் அம்பானி ஆனந்துக்கு 18 கேரட் பான்தரே டி கார்ட்டியர் வைர புரூச்சை பரிசாக வழங்கினார்.
அந்த புரூச்சில் 51 சபையர்கள், இரண்டு எமரால்டுகள், 606 அன்கட் டயமண்டுகள், ஒரு ஓனிக்ஸ் வைரம் பதிக்கப்பட்டிருந்தன.
இந்த தனித்துவமான புரூச்சின் விலை ரூ.1 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரத்து 876 ஆகும்.
பிரியமான தாத்தா பாட்டியான முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் புதிதாகப் பிறந்த இரட்டையர்களான கிருஷ்ணா, ஆதியாவுக்கு விலை உயர்ந்த 5 அடி நீள மஞ்சள் நிற குளோசெட்டில் குழந்தைகள் விரும்பக்கூடிய வால்பேப்பர்கள், ஹாட்-ஏர் பலூன்கள், மேகங்கள், ஒரு விமானம் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு பரிசாகத் தந்தனர்.
அந்த குளோசெட் கதவில் மேல் அட்வென்டர்ஸ் ஆப் கிருஷ்ணா எனப் பொறிக்கப்பட்டிருந்தது. இதன் விலை பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த பர்னிச்சர் Loro Piana, Hermès Dior நிறுவனத்தில் இருந்து அன்டிலியாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்ததன்று புத்தம் புதிய பென்ட்லி காண்ட்டினென்டல் ஜிடிசி கார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நின்றதாகப் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்த சொகுசு கார் விலை ரூ.4.5 கோடி என்றும் இதை தனது இளைய மகனுக்காக முகேஷ் அம்பானி பரிசாக அளித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications