மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இந்திய மக்களை மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கண்கவர் நிகழ்வாக அமைந்துள்ளது.
பிரபல ஹெல்த்கேர் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்-ஐ ஆனந்த் அம்பானி இன்று திருமணம் செய்ய உள்ளார்.

இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஸ்டார் விருந்தினர்களின் வசதிக்காக அம்பானி குடும்பம் விமானப் போக்குவரத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.
அம்பானி குடும்பம் மூன்று ஃபால்கன் 2000 ரக தனியார் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் சிஇஓ ராஜன் மேரா தெரிவித்தார். இது தவிர இந்த திருமண நிகழ்ச்சியின் போது 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஸ்டார் விருந்தினர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருவதால், ஒவ்வொரு விமானமும் நாடு முழுவதும் பல முறை பயணம் செய்ய உள்ளதாக ராஜன் மேரா தெரிவித்தார்.
இதற்கு முன்னர், குஜராத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய விழாவிற்காகவும் 10 நாட்கள் ஜாம்நகர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தியது, இப்போதும் விமான ஏற்பாடுகளை மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டது மறக்கமுடியாது.
ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தால் மொத்த மும்பையும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த மும்பை போக்குவரத்து காவல்துறை ஜூலை 5 அன்று போக்குவரத்து மாற்றங்களை வெளியிட்டது.

ஜியோ வேர்ல்டு டிரெட் சென்டருக்கு செல்லும் வழித்தடங்களில் ஜூலை 12 முதல் ஜூலை 15 வரை இந்த போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும், இக்காலகட்டத்தில் பொதுமக்களின் பயணம் மாற்றுப்பாதைகளிலும், சில பகுதிகளில் தடைசெய்யவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications