இந்தியாவின் செல்வ செழிப்புமிக்க குடும்பங்களில் ஒன்றாக முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவரான முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். இவருடைய நிறுவனத்தின் மதிப்பு வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ. 16.52 லட்சம் கோடியாக உள்ளது. ஃபோர்ப்ஸ் தகவல் படி டிசம்பர் 27-ஆம் தேதி அன்று முகேஷ் அம்பானியின் நிகழ் நேர சொத்து மதிப்பு 95.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் ரூ.812557 கோடி.
முகேஷ் அம்பானியின் சொத்து அவருடைய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமத்தின் 42 சதவீத பங்குகளில் இருந்து கிடைக்கிறது. கடந்த 4 நிதியாண்டுகளாக முகேஷ் அம்பானி எந்தவித சம்பளமும் பெறவில்லை. கோவிட் 19 தொற்று ஏற்பட்டபோது முகேஷ் அம்பானி இந்த முக்கிய முடிவை எடுத்தார். முகேஷ் அம்பானி மட்டுமின்றி அவருடைய குடும்ப உறுப்பினர்களும் கணிசமான நிகர மதிப்பை கொண்டுள்ளனர்.

2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாரியத்தில் இயக்குனராக பணியாற்றிய அவருடைய மனைவி நீதா அம்பானி ரூ.2 லட்சம் கமிஷனும், 97 லட்சம் சம்பளமும் பெற்றார். 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி நீதா அம்பானியின் நிகர மதிப்பு ரூ. 2,340 முதல் ரூ. 2510 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோரின் 3 குழந்தைகளும் ரிலையன்ஸ் குடும்பத்தில் உள்ளனர். ஆகாஷ் அம்பானி ஜியோவின் தலைவராக இருக்கிறார். மகள் ஈஷா அம்பானி சில்லறை மற்றும் நிதி சேவைகளை மேற்பார்வையிடுகிறார். இளைய மகனான ஆனந்த் அம்பானி எரிசக்தி துறையை மேற்பார்வையிடுகிறார்.
ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் அவர் 31வது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய நிகர மதிப்பு ரூ. 800 கோடியாகும். நிறுவனத்தின் தொலைத்தொடர்பு துறையை கண்காணிக்கும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 32-வது இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 3,300 கோடியாகும். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஒவ்வொரு ஆண்டும் ரூ.4.2 கோடி சம்பளம் பெறுகிறார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்துள்ளது. மும்பையை தளமாக கொண்ட ரிலையன்ஸ் குழுமம் பாலிமர் மற்றும் ரசாயன உற்பத்தியிலும் முன்னணி வகிக்கிறது. ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராகவும் முகேஷ் அம்பானி உள்ளார். இவர்களுடைய மும்பை மாளிகையான ஆன்டிலியாவின் மதிப்பு சுமார் ரூ.15,000 கோடியாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications