அம்பானி-க்கு புது பிரச்சனை.. கல்யாண வீட்டில் சோகம் எட்டிப்பார்க்குது.. மோனோபோலி அச்சம்..!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வியாகாம்18 மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஸ்டார் இந்தியா இடையேயான இணைப்பு, இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) கடுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

வயாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா கூட்டணி சுமார் 8.5 பில்லியன் டாலர் அதாவது 70,352 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இக்கூட்டணி நிறுவனத்தில் ரிலையன்ஸ் 16.34% பங்குகளையும், வயாகாம்18 46.82% பங்குகளையும், டிஸ்னி 36.84% பங்குகளை வைத்திருக்கும்.

அம்பானி-க்கு புது பிரச்சனை.. கல்யாண வீட்டில் சோகம் எட்டிப்பார்க்குது..  மோனோபோலி அச்சம்..!!

மேலும் நீதா அம்பானி இந்த கூட்டு நிறுவனத்தின் தலைவராகவும், உதய் ஷங்கர் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு பெரும் ஆபத்து உருவாகியுள்ளது.

வியாகாம்18 மற்றும் ஸ்டார் இந்தியா இணைப்பு, ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்த இணைப்பு குறித்து CCI அமைப்பு ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவுகளில் இந்த இரண்டு நிறுவனங்களின் சந்தை பங்கீடு பெரும் ஆதிக்கத்தைக் கொண்டு இருக்கும் காரணத்தால் மோனோபோலி நிலையை உருவாகக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இந்த இணைப்பு குறித்து ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் ஆகிய இரு பிரிவுகளிலும் வியாகாம்18 மற்றும் ஸ்டார் இந்தியா ஆகியவை முன்னிலை நிறுவனங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மோனோபோலி இருக்க கூடாது என்பதை CCI அமைப்பு கூர்ந்து கவனித்து வருகிறது

சோனி-ஜீ இணைப்பு குறித்த சி.சி.ஐ. உத்தரவைக் பார்க்கும் போது, வியாகாம்18 மற்றும் ஸ்டார் ஆகிய நிறுவனங்கள், தங்களுடைய சந்தை பங்கு வரம்பை மீறும் பிரிவுகளில் குறிப்பிட்ட சேனல்களைக் கைவிட வேண்டியிருக்கும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், சோனி-ஜீ இணைப்புக்கு CCI நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதலை வழங்கியது. இந்த ஒப்புதல் அறிக்கையில் இக்கூட்டணி வெற்றிகரமாக நடைமுறைக்கு வர பிக்மேஜிக், ஜீ கிளாசிக், ஜீ ஆக்ஷன் ஆகிய மூன்று சேனல்களை மூட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

பொதுவாக, நிறுவன இணைப்புகளின் போது சந்தை பங்கு 40-50% ஐ விட அதிகமாக இருந்தால், CCI விரிவான விசாரணை நடத்தும். சந்தை மதிப்பீடுகளின்படி, தொலைக்காட்சி ஒளிபரப்பு பிரிவில், ஸ்டார்-வியாகாம்18 கூட்டணி, நெட்வொர்க் அளவில் 40% க்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கீட்டைக் கொண்டுள்ளது.

ஸ்டார் 30% க்கும் மேற்பட்ட சந்தை பங்கைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் வியாகாம்18 10% க்கும் மேற்பட்ட சந்தை பங்கைக் கொண்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL), ஐசிசி (ICC), இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியங்களுக்கான ஒளிபரப்பு உரிமைகள், புரோ கபடி, ஐஎஸ்எல், ஈபிஎல் போன்ற விளையாட்டுக்களின் நேரடி ஒளிபரப்பு உரிமைகள் என ஸ்டார்-வியாகாம்18 கூட்டணி, நேரடி விளையாட்டு பிரிவில் கிட்டத்தட்ட முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

இந்த இணைப்பின் மூலம் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் துறையில், போட்டித்திறன் குறையும் அபாயமும், பார்வையாளர்களின் தேர்வு பாதிப்பு அபாயம் இருப்பதாக கருத்து நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்த இணைப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+