இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி சேவை பிரிவான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான BlackRock உடன் இணைந்து புதிய கூட்டணி நிறுவனத்தை நடத்தும் பணியில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டிலேயே இதற்கான அறிவிப்புகள் வந்தாலும் இதுநாள் வரையில் ஒப்பந்த அளவிலேயே இருந்தது. தற்போது முறையாகக் கூட்டணி நிறுவனத்தை நிர்வாகம் செய்யத் துவங்கியுள்ளது இக்கூட்டணி. இந்த கூட்டு முயற்சி மூலமாக, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் கால் பதிக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனமாக ஜியோ வளர்ந்த நிலையில், புதிய வர்த்தகம் அனைத்திற்கும் ஜியோ-வின் பெயரை பயன்படுத்த இக்குழுமத்தின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகேஷ் அம்பானி முடிவு செய்தார்.
இதன் அடிப்படையில் தான் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனியாகப் பிரிக்கப்பட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அடுத்த சில வாரத்தில் பிளாக்ராக் உடனான கூட்டணி அறிவிப்பு வெளியானது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இரு நிறுவனங்களும் 50:50 என்ற கூட்டணியில் இந்தியாவில் சொத்து மேலாண்மை சேவைகளை வழங்க "ஜியோ பிளாக்ராக்" என்ற நிறுவனத்தைத் துவக்க இருப்பதாக அறிவித்திருந்தன. அப்போது, இரு நிறுவனங்களும் தலா 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப்போது, wealth management துறையில் கூட்டு முயற்சியை அறிவித்து ஏறத்தாழ ஒரு வருட காலத்திற்குள், இந்த கூட்டணி நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் செல்வ மேலாண்மை மற்றும் ஸ்டாக் ப்ரோக்கிங் சேவைகளை வழங்க இருப்பதாக ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோ பிளாக்ராக் நிறுவனம் முதலில் ஒரு செல்வ மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவதும், அதைத் தொடர்ந்து ஒரு ஸ்டாக் ப்ரோக்கிங் நிறுவனத்தை நிறுவவும் திட்டமிட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Jefferies நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள அதிக சொத்து மதிப்புடைய தனிநபர்களின் (High Net-worth Individuals - HNIs) சுமார் 1-1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதி சொத்துகளை இந்தியச் செல்வ மேலாண்மை நிறுவனங்கள் கையாள்கின்றன என அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனமான பிளாக்ராக் அனுபவமும், இந்திய சந்தையில் ஜியோ நிறுவனத்தின் பலமும் இணைவதால், இந்த புதிய கூட்டு முயற்சி இந்தியச் செல்வ மேலாண்மை துறையில் ஒரு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பிளாக்ராக் நிறுவனத்தின் கீழ் மட்டும் சுமார் 10.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை நிர்வாகம் செய்கிறது, இது கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரத்தை விடவும் 3 மடங்கு அதிக மதிப்புடைய சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறது.
பிளாக்ராக் இந்தியாவில் DSP உடன் கூட்டணியில் DSP BlackRock Investment Managers பெயரில் மியூச்சவல் பண்ட் வர்த்தகத்தில் இருந்தது, இதை தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க முடியாத காரணத்தால் 2018ல் வெளியேறியது. தற்போது Jio BlackRock கூட்டணியில் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மூலம் முகேஷ் அம்பானி தன்னிடம் இருக்கும் டேட்டா மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய நிதியியல் சேவை துறையில் பெரிய வர்த்தகத்தை ஈர்க்க வேண்டும் என்பது தான் திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்த BlackRock நிறுவனத்திடம் Aladdin என்ற ஒரு அற்புத விளக்கு உள்ளது, அதாவது ஒரு டிஜிட்டல் சொத்து மேலாண்மை தளம்.
BlackRock நிறுவனத்திடம் Aladdin என்பது ஒரு மென்பொருள், BlackRock நிறுவனம் இந்த தளத்தை முதலில் தனது சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்காக உருவாக்கியது, பின்னர் தனது வாடிக்கையாளர்களுக்கு software as a service ஆக விற்பனை செய்தது. இத்தளம் மூலம் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தையும், முதலீட்டையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications