முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 3 பில்லியன் டாலர் தொகையைக் கடனாகப் பெறுவதற்காகப் பல வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த குறிப்பிடத்தக்கக் கடன், 2025 இல் காலாவதியாகும் நிறுவனத்தின் கடன்களை அடைக்க இந்த கடன் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனம் வாங்கிய கடன் உரிய நேரத்தில் திருப்பி அளிக்கப்படுகிறதா என்பதை மட்டும் தான் முதலீட்டாளர்கள் பார்க்கும் காரணத்தால், வர்த்தகத்தில் வரும் வருமானத்தை மறுமுதலீடு செய்து விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனிடையில் கடனை திரும்பச் செலுத்த மீண்டும் கடன் வாங்கி செலுத்தும், இது உலகளவில் இயல்பான நடைமுறை என்பதை மறுக்க முடியாது.

சுமார் 6க்கும் அதிகமான டஜன் வங்கிகள் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் விதிமுறைகளை ஆலோசனை செய்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த கடன் வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது கிட்டத்தட்ட 25458 கோடி ரூபாய் கடன் என்பதால் வங்கிகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிதி நிலையைத் தீவிரமாக ஆய்வு செய்த பின்பே வழங்கும், இதனால் முதலீட்டாளர்களுக்கு இந்த 3 பில்லியன் டாலர் கடன் ஒப்புதலும் முக்கியமானதாக விளங்குகிறது.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவல் படி 2025ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் சுமார் 2.9 பில்லியன் டாலர் கடனை திரும்பி செலுத்த வேண்டும், இதில் வட்டியும் அடக்கம்.
2023 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான Reliance Jio Infocomm 8 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன்களைப் பெற்றதன் மூலம் மிகப்பெரிய நிதி திரட்டல் நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்தது. இதை தொடர்ந்து, தற்போது 3 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை பெற திட்டமிட்டு வருகிறது.
இந்த 3 பில்லியன் டாலர் கடனில் பெரும் பகுதி வெளிநாட்டு கடன் சந்தையில் இருந்து திரட்டுகிறது. ரிலையன்ஸ் தனது 8 பில்லியன் டாலர் நிதி திரட்டலில் சுமார் 55 கடன் வழங்குநர்கள் பங்களித்தனர். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் கடன் தகுதியை காட்டி, முதலீட்டாளரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இதேபோன்ற முயற்சியைத் தான் தற்போது கையில் எடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.
இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 0.71 சதவீதம் சரிந்து 1285.95 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications