தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் சென்னையோடு மட்டும் நின்று விடாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாகி வருகின்றன . பல்வேறு இந்திய நிறுவனங்களும் சரி சர்வதேச நிறுவனங்களும் சரி தங்களுடைய ஆலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னை கடந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ,நெல்லை ,திருச்சி ,மதுரை, சிவகங்கை , தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களிலும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய உற்பத்தி ஆலைகளை அமைக்க தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தமிழ்நாட்டில் தன்னுடைய உற்பத்தி ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடெக்ஸ் நிறுவனம் தன்னுடையை ஆலையை 1156 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடியில் அமைக்க இருக்கிறது. தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஆலையை அமைக்க இருக்கிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில் கையெழுத்தானது .
ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனம் தன்னுடைய ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையை அல்லிகுளம் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்க உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா புகைப்படத்தோடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் . அதில் 60 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
பலதரப்பட்ட பொருட்களை தயாரிக்கும் மற்றும் பேக்கேஜிங் செய்யும் ஒரு ஆலையாக இந்த ஆலை அமையும் என அவர் தெரிவித்திருக்கிறார் . தின்பண்டங்களில் தொடங்கி பிஸ்கட்டுகள் வரை மசாலா பொருட்களில் தொடங்கி சமையல் எண்ணெய் என பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங் ஆலையாக இது செயல்படும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆலை சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரப் போகிறது என்றும் கூறியிருக்கிறார் .

திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழ்நாடு தொடர்ந்து பல்வேறு பலதரப்பட்ட நிறுவனங்களையும் பலதரப்பட்ட முதலீட்டையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது, நுகர்வோர் பொருட்கள் பிரிவில் தேசிய அளவில் பிரதானமாக செயல்படக்கூடிய நிறுவனங்களும் தமிழ்நாட்டை தேடி வந்து முதலீடு செய்கின்றன என சுட்டிக்காட்டி இருக்கிறார். ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஒரு துணை நிறுவனம் தான் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனம். FMCG பிரிவில் குளிர்பானங்கள், திண்பண்டங்கள் உள்ளிட்டவற்றை இது விற்பனை செய்கிறது.
தூத்துக்குடியில் இரு தினங்களுக்கு முன்னர் தான் கொச்சின் ஷிப்யார்டு மற்றும் மசாகான் டாக் ஆகிய நிறுவனங்கள் கப்பல் கட்டும் தளங்களை அமைக்க ஒப்பந்தம் செய்தன. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவன ஆலையும் இங்கே அமைக்கப்பட உள்ள நற்செய்தி வெளியாகியுள்ளது. இப்படி தொடர்ச்சியான முதலீடுகள் வருவது தூத்துக்குடி மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கி மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications