மும்பை: ஆயில், டெலிகாம், ரீடைல் அடுத்து தற்போது நிதி சேவை துறையின் மீது முகேஷ் அம்பானியின் கவனம் திரும்பியுள்ளது. ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து பெரும் கனவுத் திட்டத்துடன் அதன் நிதியியல் பிரிவைத் தனியாகப் பிரித்து தற்போது ஒவ்வொரு படியாக எடுத்து வைக்கிறது ரிலையன்ஸ்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும், கடன் சேவை சந்தையைக் கைப்பற்றும் நோக்கில், முகேஷ் அம்பானியின் நிதி சேவை நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் இந்தியத் தலைமை அதிகாரியை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் முக்கிய பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு உயர் அதிகாரியான குசால் ராய் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.51 சதவீதம் சரிந்து 379.70 ரூபாயாக உள்ளது.
ஸ்டாண்டர்ட் சார்டர்டு வங்கியை விட்டு வெளியேறிய பின்னர், குசால் ராய், அம்பானியின் ஜியோ நிதி சேவை நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜியோ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அடுத்த சில வாரங்களில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் பல்வேறு சேவைகளை விரிவாக்கம் செய்யும் நிலையில், இதன் NBFC பிரிவான ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance Ltd) திறமையான நிபுணர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து ஜியோ ஃபைனான்ஸ் பிரிந்ததற்கு முன்பே, கே.வி.காமத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், இந்திய ஸ்டேட் பேங்க் நிறுவனத்திலிருந்து சரண்ஜித் அத்ராவை தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக நியமித்துள்ளது.
குசால் ராய் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் கடந்த நான்கு வருடங்களாக நுகர்வோர், தனியார் மற்றும் வணிக வங்கி சேவைகளையும் கண்காணித்து வருகிறார்.
இந்த மாத துவக்கத்தில் முகேஷ் அம்பானியின், அமெரிக்காவின் பிளாக்ராக் உடனான கூட்டணியில் உருவான ஜியோ பிளாக்ராக் நிறுவனம் wealth management துறையில் கூட்டு முயற்சியை அறிவித்தது.
இக்கூட்டணி நிறுவனம் இந்தியாவில் செல்வ மேலாண்மை மற்றும் ஸ்டாக் ப்ரோக்கிங் சேவைகளை வழங்க இருப்பதாக ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது, இரு நிறுவனங்களும் தலா 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications