சில நாட்களுக்கு முன்பாக கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்த இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்டியூட்டின் சிஇஓ அதார் பூனவாலா ஒரு லண்டனில் மிகவும் காஸ்ட்லியான ஒரு வீட்டை ரூ.1446 கோடிக்கு வாங்க முக்கியமான ஒப்பந்தம் செய்தார்.
லண்டனின் ஹைடு பார்க் பகுதியில் உள்ள 1921ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மேஃபேர் மேன்ஷன், ஏபர்கான்வே ஹவுஸ் என்ற அந்த வீட்டின் 25,000 சதுர அடிக்கான பணத்தை தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

பூனவாலா போலவே இந்தியாவைச் சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் பலரும் லண்டனில் சொந்த வீடுகளை வாங்கிக் குவிக்கின்றனர்.
லண்டனில் அதிக தொழில் வாய்ப்பு, சிறந்த வாழ்க்கை முறை, தரமான கல்வி போன்ற காரணங்களுக்காக லண்டனை தங்களது புகலிடமாக இந்திய செல்வந்தர்கள் கருதி அங்கு சொத்துகளில் முதலீடு செய்கின்றனர். இது தங்களது சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் நினைக்கின்றனர்.
Knight Frank Attitude என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா போன்ற நாடுகளில் சொத்துகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் ரியல் எஸ்டேட்டில் செய்யும் முதலீடுகளால் தங்களது பணத்துக்கு அதிகமான வருவாய் இருக்கிறது என்று இந்திய செல்வந்தர்கள் கருதுகின்றனர். இந்தியப் பணவீக்கத்தை ஒப்பிட்டால் இதுதான் புத்திசாலித்தனம் என்று கூறுகின்றனர்.
லண்டனில் பூனவாலா செய்த முதலீட்டை ஒப்பிடும்போது மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒரு பழம்பெரும் தனி வீட்டை ரூ.1001 கோடிக்கு ராதாகிருஷ்ணன் தமணியும் அவரது சகோதரர் கோபிகிஷன் தமணியும் 2021 ஆம் ஆண்டில் வாங்கியுள்ளனர்.
லண்டன், மன்ஹாட்டன் அல்லது மும்பையில் சொத்து வாங்குவது இந்திய செல்வந்தர்களுக்கு ஒரு அந்தஸ்து பற்றிய விஷயமாக உள்ளது என்று ரியல் எஸ்டேட் தொழில் நிபுணர் ரித்தேஷ் மேத்தா கூறுகிறார்.
அண்மைக்காலமாகவே வெளிநாடுகளில் இந்திய செல்வந்தர்கள் சொத்துகளை வாங்கிக் குவிப்பது அதிகரித்து வருகிறது என்று Cushman & Wakefield நிறுவனம் குறிப்பிடுகிறது. 2023 நிதியாண்டில் இந்தியர்கள் சொத்து வாங்கும் விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.
இங்கிலாந்தின் பொருளாதாரம் வலுவற்று இருக்கும்நிலையில் இதுபோன்று சொத்து வாங்குவது சிறந்த தேர்வாகத் தெரிகிறது என்று இந்தியத் தொழிலதிபர்களும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications