இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் (trade deal) பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஜூலை 9ஆம் தேதிக்குள் அந்த ஒப்பந்தம் முடிவாக வேண்டும். இல்லையெனில், இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் புதிய வரி (tariff) விதிக்கக்கூடும். இந்த சூழ்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், ஆசியாவின் சிறந்த பணக்காரருமான முகேஷ் அம்பானி, இந்தியா அரசாங்கம் பேசுவதற்கு முன், தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு ஒரு வகையான நன்மையை ஏற்கனவே கொடுத்திருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.
அதாவது ரிலையன்ஸ் நிறுவனம், அமெரிக்காவில் இருந்து பெரும் அளவில் எரிவாயு (LNG), எண்ணெய் போன்றவற்றை வாங்குகிறது. இது அமெரிக்காவுக்கு பெரிய வருமானத்தை தருகிறது. இதனால், அமெரிக்கா, இந்தியாவிடம் அதிகம் வாதம் செய்யாமல் வர்த்தக ஒப்பந்தத்தில் வசதியாக ஒப்புக்கொள்ளலாம் என்பதே எண்ணம். அதாவது, முகேஷ் அம்பானியின் வணிக நடவடிக்கைகள், இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், அமெரிக்காவை சாதகமாக மாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு, அமெரிக்காவில் இருந்து மீண்டும் ஒரு ஈத்தேன் (Ethane) எரிவாயு கப்பல் வந்து சேர இருக்கிறது. இந்த எரிவாயு கப்பல் முதலில் சீனாவுக்கு செல்ல இருந்தது. ஆனால், தற்போது அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக மோதல் காரணமாக அந்தக் கப்பல் இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கே அனுப்பப்படுகிறது. இந்த எத்தேன் குஜராத்தின் தாஹேஜ் (Dahej) பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸில் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு இதை "Ethylene" எனும் வாயுவாக மாற்றுவார்கள். இது பிளாஸ்டிக் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.
இந்த நடைமுறை ரிலையன்ஸின் உற்பத்திச் செலவுகளை குறைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு விதித்த 26% 'பதிலடி வரிக்குரிய' (reciprocal tariff) கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஒரு பதிலடியாகவும் அமையலாம் என Bloomberg வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது.
இந்தியா - அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்தி வரும் நேரத்தில், "நாங்கள் உங்கள் எரிவாயுவை (ethane) வாங்கப்போறோம்" என்ற வாசகம், பேச்சுவார்த்தையின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்து விடக்கூடும். இது சாதாரண வாக்குறுதி அல்ல. பல பில்லியன் டாலர் மதிப்புடைய எத்தேன் எரிவாயு இறக்குமதியைத்தான் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த செயல், அமெரிக்காவுக்கான வர்த்தகச் செலவு குறைவதற்கும், இந்தியாவுடனான வர்த்தக பாகுபாட்டை சமன்செய்யவும் உதவக்கூடும். மேலும், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் எரிசக்தி இறக்குமதியில் காட்டும் ஆர்வம், அரசியல்துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.
அமெரிக்கா தயாரிக்கும் ஈத்தேன் (Ethane) எரிவாயுவை பயன்படுத்தும் வழக்கத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகிறது. முன்னதாகவே, 2017ஆம் ஆண்டில், வட அமெரிக்காவில் இருந்து எத்தேனை பெருமளவில் இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை உருவாக்கிய முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்தான். இந்தியாவில் நாஃப்தா (Naphtha) என்ற பொருளே நீண்ட காலமாக பெட்ரோ கெமிக்கல் உற்பத்திக்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஈத்தேன் அதன் இடத்தை பிடித்து வருகிறது. அதற்கு காரணம், எத்தேனில் இருந்து பெறப்படும் எத்திலீன் வெளியீடு 80% வரை இருக்கும். ஆனால், நாஃப்தாவில் 30% மட்டுமே இருக்கும். அதேசமயம், எரிசக்தி திறனை பொறுத்தவரை ஈத்தேனின் விலை நாஃப்தாவை விட பாதியாகும். மேலும், இந்தியாவில் தற்போது பையோஃப்யூயல் (biofuel) மற்றும் மின்சார வாகனங்கள் (EV) வளர்ந்து வருவதால், எண்ணெய் தேவைகள் மந்தமாகி வருகிறது. இதனால், எத்தேனுக்கான தேவை அதிகமாகியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளில் முக்கிய பாத்திரம் வகிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது, அவர் குஜராத்தில் உள்ள மற்றொரு யூனிட்டுக்குப் (தயாரிப்பு மையம்) எத்தேன் எரிவாயுவை கொண்டு செல்ல 100 கிலோமீட்டர் நீளமான குழாய்கள் அமைக்க திட்டமிட்டுள்ளார். அதோடு, தற்போது இருக்கிற 6 எத்தேன் கப்பல்கள் எண்ணிக்கையை 9 ஆக விரிவுபடுத்தும் திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார். இந்த வளர்ச்சிக்கு அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் ஆகிய நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. இது, இந்தியா தனது பெட்ரோ கெமிக்கல் தேவைகளுக்கான அமெரிக்க ஆற்றல்களைப் பெரிதும் நம்பத் தொடங்கிவிட்டதை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவுக்கு இதற்கு முன் இயற்கை எரிவாயு (natural gas) வழங்கிய முக்கிய நாடான கத்தார், சமீபத்தில் ONGC-வுடன் இருந்த எரிவாயு ஒப்பந்தங்களை மாற்றியுள்ளது. இதில், இனி எத்தேன் எரிவாயு தனியாகவே பணம் கொடுத்தால் மட்டுமே வழங்கப்படும் என்று புதிய நிபந்தனையை விதித்துள்ளது. இதனால், இந்திய கெமிக்கல் தொழிற்சாலைகள், குறைந்த செலவிலான அமெரிக்காவின் எத்தேனை வாங்கத் தொடங்கியுள்ளன.
முகேஷ் அம்பானியின் ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் முதல் கெமிக்கல்களுக்கு (Oil-to-Chemicals) அடிப்படையான ரிலையன்ஸ் வணிகம், இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதோடு, ஜியோ, ரிலையன்ஸ் ரீட்டெயில் போன்ற புதிய துறைகள் கடந்த சில ஆண்டுகளில் ரூ.4.7 லட்சம் கோடி வருமானத்தை அதிகரித்துள்ளன. ஆனால், இப்போது "Polyester Prince" என அறியப்படும், ரிலையன்ஸின் பழைய பெட்ரோ கெமிக்கல் துறை தான், வர்த்தக மோதல்களில் முக்கிய இடத்தை பெறவுள்ளது.
அமெரிக்கா, ஜூலை 9ஆம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் முடிக்காவிட்டால் கடுமையான வரிகளை விதிக்க வாய்ப்பு உண்டு. இந்தியா, அமெரிக்காவில் மின்னணு உள்ளிட்ட பொருட்களுக்கு சந்தை அணுகலை விரும்புகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா, அமெரிக்கா தயாரிக்கும் ஈத்தேன் எரிவாயுவை வாங்குவது ஒரு வலுவான பேச்சுவார்த்தை ஆயுதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தொழில்துறை சார்ந்த பொருட்கள் (ஈத்தேன் போன்றவை) பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக மாறும். இதனால், வரி அதிகரிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். இந்தியா-அமெரிக்கா வணிக உறவுகளை சமநிலைக்கு கொண்டு வர உதவும். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தரும்.
முகேஷ் அம்பானியின் எரிசக்தி முயற்சி இந்தியாவை, உலகளாவிய பெட்ரோ கெமிக்கல் (எரிவாயு மற்றும் ரசாயன பொருட்கள்) துறையில் சீனாவின் அதிகாரத்தை சமநிலைப்படுத்த உதவும் ஒரு சக்தியாக மாற்றும் என்றே தெரிகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications