பாரீஸ்: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஹோட்டலில் தங்கி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இவர்கள் பாரீஸில் தங்கியுள்ளனர். நீதா அம்பானி ஒலிம்பிக் சர்வதேச கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அத்துடன் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக பாரீஸில் ஒலிம்பிக் வீரர்களுக்காக இந்திய இல்லம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி தான் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பாரீஸில் முகாமிட்டுள்ளனர். நீதா அம்பானி ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக இருப்பதால் குடும்பத்தினருடன் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, அவரது மகள் ஈஷா அம்பானி மற்றும் மருமகன் ஆனந்த் பிராமல் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இவர்கள் குடும்பமாக பாரீஸில் தங்கி இருக்கும் ஹோட்டல் குறித்து தான் சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அம்பானி குடும்பத்தினர் பாரீஸுக்கு செல்லும்போதெல்லாம் இந்த ஹோட்டலில் தான் தங்குவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் திருமணம் முடிந்த ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்சண்ட்டும் பாரீஸ் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கி இருப்பது பாரீஸின் புகழ்பெற்ற Four Seasons Hotel George V ஹோட்டல் ஆகும். பாரீஸின் அடையாளங்களுள் ஒன்றாக இது திகழ்கிறது. இந்த ஹோட்டலுக்கு அருகிலேயே புகழ்பெற்ற வரலாற்று தலங்கள் உள்ளன.

பாரீஸுக்கு வரக்கூடிய பல்வேறு பிரபலங்களும் தங்கக்கூடிய ஒரு ஹோட்டல் தான் இது. 1928 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது,அதன் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்புகளுக்கு பெயர் போனது. இந்த ஹோட்டலில் 244 அறைகள் உள்ளன .நவீன வசதிகளோடு பாரசீக பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இணையதளங்களில் கிடைக்கும் தகவலின் படி இங்கே ஒரு அறைக்கு ஒரு நாளைக்கான அடிப்படை வாடகை என்பது 1.8 லட்சம் ரூபாய் ஆகும்.
தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் அறை வாடகை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த ஹோட்டலில் ஸ்பா, நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஒலிம்பிக் போட்டியையொட்டி இங்கே அறைகளுக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் வரை அம்பானி குடும்பத்தினர் அங்கே தங்கி இருப்பார்கள் என தெரிகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications