உலகளாவிய திறன் மையங்கள் என்பதை தான் GCC என அழைக்கப்படுகிறது, இந்தியாவில் கடந்த 5 வருடத்தில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தையும், சேவையின் தரத்தையும் மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் ஜிசிசி அலுவலகங்களை அமைத்து வருகிறது.
ஜிசிசி அலுவலகங்களின் அருமையை தாமதமாக புரிந்துக்கொண்ட இந்திய நிறுவனங்களும் தற்போது தங்கள் வர்த்தக செயல்பாடுகளை மேம்பட்ட முறையில் நிர்வாகம் செய்யவும், தங்கள் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும் இத்தகையை ஜிசிசி அலுவலகத்தை திறப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் மற்றும் பேங்க் ஆப் பரோடா போன்ற முன்னணி இந்திய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் GCC அலுவலகங்களை நிறுவியுள்ளனர்.
இந்திய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு, நிதி சேவைகள் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் இந்த ஜிசிசி அலுவலக உருவாக்கும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களால் சுமார் 50 GCC-கள் நிறுவப்பட்டு உள்ளன.
இந்தியாவில் காலம் காலமாக இயங்கி வரும் நிறுவனங்களும் விரைவாக மாறிவரும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு இந்த ஜிசிசி அலுவலகம் மூலம் தொழில்நுட்ப உத்தி மற்றும் ஐடி ஊழியர்களை நியமித்து வேகமாக பயணிக்க துவங்கியுள்ளது.
இந்திய நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில்நுட்ப அலுவலகங்களை GCC-கள் என்று குறிப்பிடாமல் இருக்கலாம், ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் துவங்கும் ஜிசிசி அலுவலகமும், இதுவும் ஓரே இலக்கில் தான் பயணித்து தனது தேவைகளை பூர்த்தி செய்கிறது.
இந்த ஜிசிசி அலுவலகத்தை தொழில்நுட்ப மையங்கள், இன்னோவேஷன் சென்டர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சென்டர் அல்லது சென்டர் பார் எக்ஸ்சலென்ஸ் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகின்றன.
இத்தகைய GCC அலுவலகங்கள் இந்தியாவில் தற்போது அதிகளவில் சிறிய நகரங்கள் மற்றும் குஜராத்தின் GIFT நகரம் போன்ற குறைந்த செலவு கொண்ட பகுதியில் தான் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படுகிறது. இதற்கு பெஸ்ட் உதாரணமாக கோயம்புத்தூர்-ஐ கூறலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான அதானி என்டர்பிரைசஸ், அகமதாபாத்தில் முழுமையாக சொந்தமான துணை நிறுவனமான அடானி GCC பிரைவேட் லிமிடெட்டை சமீபத்தில் உருவாக்கியது. இந்த புதிய நிறுவனம் மற்ற அதானி குரூப் நிறுவனங்களுக்கு வணிக மாற்றம் சேவைகள் மற்றும் பேக் ஆபீஸ் சேவைகளை வழங்கும்.
மருந்து தயாரிப்பாளர் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் அதன் பயோதொழில்நுட்ப திறன்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. இந்த நிறுவனம் ஹைதராபாத்தில் Genome Valley பகுதியில் சுமார் 700000 சதுரடி பியோலாஜிக்கல் தளத்தை திறந்தது. இங்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது, இன்னோவேஷன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் கவனம் செலுத்துகிறது.
பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பாரோடா, தனது வங்கி சேவையில் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், இன்னோவேஷன், புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்ற புதிய துணை நிறுவனமான பாரோடா சன் டெக்னாலஜீஸை நிறுவியுள்ளது.
உலகளாவிய GCC அலுவலகங்களின் தலைநகராக இருக்கும் இந்தியாவில் தற்போது 19 ஊழியர்கள் உடன், 1,700க்கும் மேற்பட்ட GCC அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 2,100 முதல் 2,200 GCC-களுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இதில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 25 முதல் 28 லட்சம் வரையில் அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications