அம்பானி டூ பிர்லா வரை: வாரிசு கைக்கு வந்த சாம்ராஜ்ஜியங்கள்..! இனி ஆட்டம் வேற லெவல்..!

நம் நாட்டின் மிகப்பெரிய வணிக குடும்பங்களில் ஒரு மாற்றம் சத்திமில்லாமல் அரங்கேறி வருகிறது. புதிய தலைமுறையிடம் வணிக பொறுப்புகளை ஒப்படைக்கும் பணி எந்தவித தடங்கலும் இல்லாமல் இனிதே நடந்து வருகிறது. பல வணிக குடும்பங்கள் ஏற்கனவே வணிக பொறுப்புகளை இளம் தலைமுறையிடம் ஒப்படைத்து விட்ட நிலையில், சில வணிக குடும்பங்களில் அதற்கான பணிகள் தொடங்கி விட்டன. அந்த வகையில் இதுவரை பல இளம் தொழிலதிபர்களை கேள்விபட்டு இருக்கலாம் அதேசமயம் சில குடும்ப வணிக குழுமங்களின் அடுத்த வாரிசுகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களை நாம் பார்ப்போம்.

அம்பானி குடும்பம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வருமான முகேஷ் அம்பானி, 2023 செப்டம்பரில் தனது குழந்தைகளையும் தனது நிறுவன குழுமத்தின் வாரியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்தார். முகேஷ் அம்பானி தனது 33 வயது இரட்டையர்களான இஷா மற்றும் ஆகாஷ், 30 வயதான ஆனந்த் ஆகியோரை நிறுவனத்தில் இணைத்போது, மூத்த தலைவர்களின் அனுபவமிக்க நிபுணத்துவமும், புதிய தலைமுறையின் புதிய லட்சியமும் இணைந்து ரிலையன்ஸ் பயணத்தில் புதிய அற்புதமான மைல்கற்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

அம்பானி டூ பிர்லா வரை: வாரிசு கைக்கு வந்த சாம்ராஜ்ஜியங்கள்..! இனி ஆட்டம் வேற லெவல்..!

ஆகாஷ் அம்பானி படிப்பை முடித்தவுடன் 2014ல் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்தார். ஜியோவில் ஏஐ, பிளாக்செயின் மற்றும் ஐஓடி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளார். தயாரிப்புகள் மற்றும் அனைத்து டிஜிட்டல் சேவை பயன்பாடுகளின் வளர்ச்சியிலும் அவர் நெருக்கமாக ஈடுபட்டுள்ளார்.

இஷா அம்பானி யேல் பல்கலைக்கழகத்தில் இரட்டை பட்டம் பெற்றவர் மற்றும் ஸ்டான்போர்டில் எம்பிஏ பட்டம் பெற்றவர். தற்போது இவர் ரிலையன்ஸின் சில்லரை வர்த்தகம், இ காமர்ஸ் மற்றும் ஆடம்பர துறைகளை வழிநடத்தி வருகிறார்.

ஆனந்த் அம்பானி பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் எரிசக்தி மற்றும் பொருட்கள் வணிகங்களின் விரிவாக்கத்திலும், புதுப்பிக்கத்தக்க மற்றும் பசுமை எரிசக்தியில் அதன் உலகளாவிய செயல்பாடுகளிலும் கவனம் செலுத்துகிறார். ரிலையனஸின் தொண்டு நிறுவனமான ரிலையன்ஸ் பவுன்டேஷனின் குழுவிலும் பணியாற்றுகிறார்.

டாடா குடும்பம்
டாடா சன்ஸ் தலைவர் நோயல் டாடா தனது 3 குழந்தைகளான நெவில், லியா மற்றும் மாயா ஆகியோரை சில ஆண்டுகளுக்கு முன் டாடா குழுமத்தில் அமைதியாக கொண்டு வந்தார். நோயலின் மூத்த மகளான 39 வயது லியா டாடா, இந்தியன் ஹோட்டல்ஸின் துணை தலைவராக உள்ளார். தற்போது கேட்வே பிராண்டைக் கையாளுகிறார். மும்பையில் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலை நிர்வகித்து வருகிறார்.

இரண்டாவது மகளான 36 வயது மாயா டாடா, டாடா டிஜிட்டலில் உள்ளார் மற்றும் டாடா நியூ செயலியை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். தற்போது இவர் டாடா மெடிக்கல் சென்டர் குழுவிலும் பணியாற்றுகிறார்.

நோயலின் 3வது வாரிசும் ஒரே மகனுமான 32 வயது நெவில் டாடா இங்கிலாந்தின் பேயஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது டாடா குழுமத்தின் சில்லரை வணிகங்களை கொண்ட டிரெண்ட்டின் ஹைப்பர் மார்க்கெட் பிரிவான ஸ்டார் பஜாரின் தலைவராக உள்ளார்.

கோத்ரெஜ் குடும்பம்
கடந்த மே மாதம் கோத்ரெஜ் குழுமத்தில் சொத்து உரிமை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமம் (ஜிஇஜி) மற்றும் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஜாம்ஷித் கோத்ரெஜின் மகள் நிரிகா ஹோல்கர் (வயது 42) கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தில் 14 நிறுவனங்களுக்கும் சட்ட மற்றும் நிறுவன ஆலோசன செயல்பாடுகளை வழிநடத்துகிறார். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.

ஆதி கோத்ரெஜின் மகன் பைரோஜ்ஷா கோத்ரெஜ் (வயது 44) கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின நிர்வாக துணை தலைவராக உள்ளார். 2026 ஆகஸ்டில் நாதிர் கோத்ரெஜுக்கு தலைவராக வருவார்.

பஜாஜ் குடும்பம்
பஜாஜ் குழுமம் தலைவர் பதவியை நீக்கிவிட்டு, ராகுல் பஜாஜின் மகன்கள் ராஜீவ் மற்றும் சஞ்சீவ், அவரது உறவினர்கள் சேகர் மற்றும் நிராஜ் மற்றும் அவரது மகன் நிரவ் ஆகியோர் அடங்கிய குடும்ப கவுன்சில் மூலம் ஒருமித்த கருத்து மூலம் செயல்பட்டு வருகிறது. பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் பஜாஜின் மகன் ரிஷப்நயன் பஜாஜ் (வயது 27) கடந்த ஆண்டு நிறுவனத்தில் பிரிவு (தயாாரிப்பு உத்தி -இவி) மேலாளராக சேர்ந்தார்.

நீரவ் நிரஜ் பஜாஜின் மகன் நிரவ் பஜாஜ் (வயது 33), பஜாஜ் குழும நிறுவனமான முகந்தில் கார்ப்பரேட் உத்தி தலைவராக உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் பஜாஜ் குழுமம் சுகாதாரத் துறையில் நுழைவதாக அறிவித்தது, இந்த திட்டத்தை நிரவ் பஜாஜ்தான் மேற்பார்வையிட்டார். சஞ்சீவ் பஜாஜின் குழந்தைகள் தங்கள் கல்வியை முடித்தவுடன் நிறுவன பணிகளில் சேர வாய்ப்புள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் தனது குடும்பத்தின் அடுத்த சந்ததியினரிடம் வணிக கட்டுப்பாட்டை முற்றிலுமாக கொடுத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் மகன் பிரணவ் அதானி (வயது 45) தற்போது தகவல்தொடர்பு மற்றும் அனைத்து நுகர்வோர் சார்ந்த வணிகங்களை மேற்பார்வையிட்டு வருகிறார்.

கவுதம் அதானியின் மகன் கரண் அதானி (வயது 37) 2016ல் அதானி போர்ட்ஸ் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார். அவரது தலைமையின்கீழ் அந்த நிறுவனம் நான்கு துறைமுகங்களிலிருந்து 12ஆக விரிவடைந்தது. இவர் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
கவுதம் அதானியின் இளைய மகன் (வயது 26) அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளியில் பயின்றவர். 2019ல் அதானி குழுமத்தில் இணைந்தார்.

கவுதம் அதானியின் தம்பி ராஜேஷ் அதானியின் மகன் சாகர் அதானி (வயது 30) 2015ல் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு குழுமத்தில் இணைந்தார். அதானி கிரீன் எனர்ஜியி் சூரிய மற்றும் காற்றாலை இலாகாவை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. தற்போது நிறுவன கட்டமைப்பு மற்றும் நிறுவனத்தின் அனைத்து மூலோபாய மற்றும் நிதி விஷயங்களையும் மேற்பார்வையிடுகிறார்.

பிர்லா குடும்பம்

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மூத்த மகள் 29 வயதான அனன்யா பிர்லா தனது 17 வயதில் தனது முதல் நிறுவனமான ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின்னை நிறுவினார். தற்போது இந்நிறுவனம் ரூ.16,000 கோடிக்கும் அதிகமான நிர்வகிக்கும் சொத்து மதிப்பு கொண்ட இரண்டாவது பெரிய எம்எஃப்ஐ நிறுவனமாக உள்ளது.

குமார் மங்கலம் பிர்லாவின் இரண்டாவது வாரிசான ஆர்யமான் விக்ரம் வணிகத்தில் நுழைவதற்கு முன் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக இருந்தார். இவர் நிறுவனத்தின் பல்வேறு வணிகங்களில் நெருக்கமாக உள்ளார். மேலும் குழுமத்தின் விசி நிதியான ஆதித்யா பிர்லா வென்ச்சர்ஸையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு பிர்லாவின் இரண்டு மூத்த வாரிசுகளும் குழுவின முதன்மை நிறுவனங்களான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆதித்யா பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெயில் ஆகியவற்றின் வாரியங்களில் இணைந்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+