இந்திய எனர்ஜி துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் கிரீன் ஹைட்ரஜன் மற்றும் கிரீன் அமோனியா உற்பத்தி திட்டம் குஜராத்தில் முழு வேகத்தில் உருவாகவுள்ளது.
இந்த மிகப்பெரிய திட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் & டியூப்ரோ, கிரீன்கோ குரூப் மற்றும் வெல்ஸ்பன் நியூ எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் இணைந்து ரூ.1 லட்சம் கோடி வரையிலான முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் எரிசக்தி கட்டமைப்பு மற்றும் கிரீன் ஹைட்ரஜன் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்களில் இது முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
எல்லாமே கிரீன்: குஜராத்தில் கண்டலா பகுதியில் அமைந்துள்ள துறைமுகம், கிரீன் ஹைட்ரஜன் துறையில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. வருடத்திற்கு 7 மில்லியன் டன் கிரீன் அமோனியா (Green Ammonia), 1.4 மில்லியன் டன் கிரீன் ஹைட்ரஜன் (Green Hydrogen) உற்பத்தி இலக்கைக் கொண்டு மாபெரும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
குஜராத்: கண்டலா துறைமுகம் என்பது கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ளது, இது குஜராத்தின் தீன்தயாள் துறைமுக ஆணையம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது, இது நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்று.
நிலம்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கண்ட்லாவில் உள்ள குஜராத் தீண்டாயல் துறைமுக ஆணையம் தலா 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட 14 நிலப்பகுதிகளுக்கான விருப்ப விண்ணப்பத்தைப் பெற்றது. ஒவ்வொரு நிலப்பகுதியும் ஆண்டுக்கு 1 மில்லியன் டன் கிரீன் அமோனியா உற்பத்தி செய்ய இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த 14 நிலப்பகுதிகளையும் கடந்த மாதம் DPA மேற்கூறிய நான்கு நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
4,000 ஏக்கர் நிலம்: குஜராத் தீண்டாயல் துறைமுக ஆணையம் சுமார் 4,000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட 14 நிலப்பகுதிகளை வழங்கியது. இதில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 6 நிலப்பகுதிகளும், L&T நிறுவனத்திற்கு 5 நிலப்பகுதிகளும், கிரீன்கோ குரூப்புக்கு 2 நிலப்பகுதிகளும், வெல்ஸ்பன் நியூ எனர்ஜி நிறுவனத்திற்கு 1 நிலப்பகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு நிறுவனங்களும் ஏலத்தில் அதிக விலை கொடுத்து இந்த நிலத்தைப் பெற்றுள்ளன.
எரிபொருள்: கிரீன் ஹைட்ரஜன் (GH2) என்பது எவ்விதமான கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் வெளியேற்றாமல், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பயன்படுத்தி தண்ணீரை எலக்ரோலைசிஸ் மூலம் இந்த வாயு தயாரிக்கப்படுகிறது. இது பச்சை ஹைட்ரஜனை எரிபொருளாக மாற்றுவதற்கான உலகளவில் முயற்சிகள் மேற்கொண்டு வரப்படுகிறது.
நெட் ஜீரோ: இதன் ஒரு பகுதியாகும், இந்தியா தனது நெட் ஜீரோ இலக்குகளை அடைய கிரீன் ஹைட்ரஜன் உதவும். இதோடு அம்மோனியா உற்பத்தியில் பச்சை ஹைட்ரஜனுக்கான மிகப்பெரிய உற்பத்தி பொருளாக இருக்கிறது.
3 துறைமுகம்: தேசிய கிரீன் ஹைட்ரஜன் இயக்கத்தின் ஒரு பகுதியாக, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) குஜராத்தின் தீன்தயாள் துறைமுக ஆணையம், ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் மற்றும் தமிழ்நாட்டின் VO சிதம்பரனார் துறைமுகம் ஆகியவற்றை ஹைட்ரஜன் மையங்களாக அறிவித்துள்ளது. இந்த துறைமுகத்தில் கிரீன் ஹைட்ரஜன் வாயு மற்றும் கிரீன் அமோனியா-வை கையாளுதல், சேமித்தல் மற்றும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகக் கண்டறிந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications