டாடா - அம்பானி இடையே இப்படியொரு போட்டியா.. இத்தனை நாள் தெரியாம போச்சே..!

இந்திய வர்த்தக சந்தையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ரீடைல் சந்தையில் இருக்கும் வியாபாரிகள் ஈகாமர்ஸ் வர்த்தகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டில் பல இடங்களில் கடுமையான போராட்டங்களையும் நடத்தினர்.

இந்த நிலையில் ரீடைல் சந்தை வர்த்தகத்தில் தற்போது நேரடியாக பல முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் வாடிக்கையாளர்களிடம் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. பொதுவாக பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் B2B பிரிவிலும், டிஸ்ட்ரிபியூட்டர் வாயிலாக ரீடைல் சந்தைக்குள் வரும்.

டாடா - அம்பானி இடையே இப்படியொரு போட்டியா.. இத்தனை நாள் தெரியாம போச்சே..!

ஆனால் இப்போது ஆன்லைன் வர்த்தகம், நேரடி விற்பனை என ரீடைல் சந்தையை ஆட்டிப்படைக்கின்றனர். சண்டைன்னு வந்துட்டா சட்டை கிழியத்தானே செய்யும் என்பது போல் தற்போது பெரு நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இப்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரத்தன் டாடா-வின் டாடா குழுமம் பல துறைகளில் நேருக்கு நேர் மோதுகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இரு நிறுவனங்களின் பல பிராண்ட்கள் மக்களுக்கு இவர்களுடையது தான் என்று கூட தெரியாது என்பது தான். இப்படி எந்த துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமம் நேருக்கு நேர் மோதுகிறது.

தங்க நகை : இந்தியாவில் தங்க நகை விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பல ரீடைல் பிராண்டுகள் இருக்கும் வேளையில் டாடா குழுமம் இத்துறையில் தனிஷ்க் மற்றும் அதன் கீழ் பில பிராண்ட் கடைகளில் நகைகளை விற்பனை செய்கிறது. இதே துறையில் டாடா-வின் தனிஷ்க் நிறுவனத்திற்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜூவல்ஸ் இயங்கி வருகிறது, தற்போது விற்பனையை அதிகரிக்க ரிலையன்ஸ் ரீடைல் கடைகளிலும் ரிலையன்ஸ் ஜூவல்ஸ் வெள்ளி நகைகளை விற்க துவங்கியுள்ளது.

காஃபி : இந்திய மக்கள் அதிகளவில் டீ குடித்தாலும், இன்றைய இளம் தலைமுறையினர் காஃபி-ஐ லைப்ஸ்டைல் ஆக மாறி தற்போது தினமும் குடிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இதை முன்கூட்டியே தெரிந்துக்கொண்ட டாடா குழுமம் 2012ல் அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ்-ஐ இந்தியாவுக்கு கொண்டு வந்து பெரும் வர்த்தகத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை கண்டு வியந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Pret A Manger என பிரபல காஃபி மற்றும் உணவு பிராண்டை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது.

தினசரி தேவைகள் : இந்திய மக்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை பொருட்கள் முதல் ஸ்னாக்ஸ் வரையில் டாடா குழுமம் பிக் பேஸ்கட் வாயிலாகவும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஜியோ மார்ட் வாயிலாக போட்டிப்போட்டு வருகிறது.

எலக்ட்ரானிக்ஸ் : இந்தியாவில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில்
டாடா குழுமம் தனது Croma பிராண்ட் வாயிலாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரிலையன்ஸ் டிஜிட்டல் வாயிலாகவும் போட்டிப்போட்டு வருகிறது.

டை விற்பனை : உணவுக்கு பின்பு ஆடை மற்றும் லைப்ஸ்டைல் பொருட்கள் விற்பனையில் டாடா குழுமம் டாடா கிளிக், வெஸ்ட்சைட் மூலம் இயங்கிவரும் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Ajio, Zivame போன்ற பிராண்டுகள் மூலம் இருதரப்பும் நேருக்கு நேர் போட்டி போட்டு வருகிறது.

ஆடை ரீடைல்: பெரிய அளவில் ஆடை விற்பனைக்காக டாடா Zudio பிராண்ட் கீழும், ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் வாயிலாகவும் நேருக்கு நேர் போட்டி போட்டு வருகிறது.

மளிகை பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் : டாடா குழுமம் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் பிரிவில் டாடா சம்பான் (TATA SAMPANN), டாடா டீ, டாடா காஃபி, டாடா உப்பு, ஹிமாலையன் பிராண்டில் தண்ணீர், ஜாம் போன்றவற்றையும் விற்கிறது.

இத்துறையில் இறங்க திட்டமிட்ட ரிலையன்ஸ் independence என்ற தனி பிராண்டை உருவாக்கி தற்போது குஜராத்தில் மட்டும் தனது விற்பனையை துவங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+