சென்னை: அம்பத்தூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிகப்படியான தொழிற்சாலைகள், சென்னை உற்பத்தித் துறையின் முக்கிய அங்கம். ஆட்டோமொபைல் முதல் CNC வரையில் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் இருக்கும் முக்கியமான இடம். ஆனால் இந்த நிலைமை கடந்த சில வருடத்தில் தொடர்ந்து மாறி வருகிறது.
அம்பத்தூரில் கடந்த 5 வருடத்தில் பல டெக் பார்க்குகள் திறக்கப்பட்டு வரும் காரணத்தால், இப்பகுதியில் உற்பத்தித் துறைக்கு இணையாக ஐடி சேவை துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் முக்கியமான ஒரு ஐடி பார்க் அடுத்த சில மாதத்தில் திறக்க தயாராகி வருகிறது. இந்த ஐடி பார்க்-ஐ மொத்தமாக ஒரு நிறுவனம் குத்தகைக்கு எடுக்க உள்ளது.

கோஸ்மோ ஒன் பூங்காவிற்கு எதிரே உள்ள ICMC தொழில்நுட்ப பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இது 12 தளங்களைக் கொண்ட கட்டமைப்புடன், 3,50,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டு அலுவலக இடமாகும். இந்த டெக் பார்க்கில் சுமார் 2,200 பேருக்கு இடமளிக்கும் திறன் கொண்டுள்ளது.
பிரபல கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி (MSC), முழு கட்டடத்தையும் எடுத்துக்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது MSC டெக் அலுவலகமாகும், தற்போது கோஸ்மோ ஒன் பார்க்கில் இருக்கும் வேளையில் இப்புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளனர். ICMC தொழில்நுட்ப பூங்காவைப் பிரபல கட்டுமான நிறுவனமான ஷாப்பூர்ஜி பல்லோன்ஜி கட்டியுள்ளது.
அம்பத்தூர், அண்ணா நகரின் புகழ்பெற்ற பகுதியான மேற்கு சென்னையில் முக்கியமான பகுதியாகும். முகப்பேரில் விரைவாக வளரும் பகுதியான அம்பத்தூர், சென்னையின் ஐடி மையமாக மாறி வருகிறது. இங்கு பெரிய பெரிய அலுவலகங்களைக் கட்டிடங்கள் அடுத்தடுத்து கட்டப்படும் காரணத்தால், விரைவில் பல நிறுவனங்கள் இந்த டெக் பார்க்குகளில் குடியேற உள்ளது.
இதேபோல் சென்னையில் தற்போது முக்கிய மற்றும் புதிய ஐடி ஹப் ஆக மாறியுள்ள பட்டாபிராம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை மெட்ரோ வாயிலாக இணைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பட்டாபிராம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன. இதனால், இந்தப் பகுதிக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் சென்னை மெட்ரோ ரயில் கழகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications