இந்திய வர்த்தக துறையில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் விஷயம் செமிகண்டக்டர், சீனா - அமெரிக்கா மத்தியிலான பிரச்சனையில் செமிகண்டக்டர் துறையில் புதிய டிமாண்ட் உருவாகியுள்ளது. இந்த டிமாண்ட்-ஐ தீர்க்கும் தளமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மைக்ரான் இந்தியாவில் தனது பேகேஜிங் தளத்தை அமைக்கும் செய்தி சாதகமான விஷயமாக இருந்தாலும், வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி முறிந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான AMD முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவின் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனமான AMD, பெங்களூரில் உலகின் மிகப்பெரிய R&D வசதியுடன் புதிய கேம்பஸ் உருவாக்க திட்டமிட்டுள்ளது. AMD நிறுவனம் இந்தியாவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 400 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யும் திட்டத்தை AMD இன்று அறிவித்தது.
இந்த 400 மில்லியன் டாலர் முதலீட்டின் வாயிலாக ஏறக்குறைய 3000 இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு மிகப்பெரிய AMD டிசைன் சென்டரை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய பெங்களூர் வளாகம் திறக்கப்பட உள்ளதாக குஜராத்தில் SemiconIndia 2023 கூட்டத்தில் AMD தனது திட்டத்தை அறிவித்தது.
இந்தியாவில் 2001 முதல் அமெரிக்காவின் செமிகண்டக்டர் நிறுவனமான AMD இயங்கி வருகிறது. முதல் அலுவலகத்தை டெல்லியில் திறந்த நிலையில், பெங்களூரின் 500000 சதுரடி அலுவலகம் மூலம் நாட்டின் 10 இடங்களில் அலுவலகத்தை திறந்துள்ளது, AMD நிறுவனத்தின் அலுவலகம் தற்போது பெங்களூர், டெல்லி, கூர்கான், ஹைதராபாத், மும்பை ஆகிய பகுதிகளில் உள்ளது.
இதன் மூலம் மோடியின் செமிகண்டக்டர் திடத்திற்கு 400 மில்லியன் டாலர் முதலீட்டின் வாயிலாக அமெரிக்காவின் செமிகண்டக்டர் நிறுவனமான AMD கைகொடுத்துள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications