பனாமா கால்வாய் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும், உலகின் மிகவும் பரபரப்பான சரக்கு கப்பல் போக்குவரத்து பாதைகளில் இதுவும் ஒன்றாகும். திடீரென பனாமா கால்வாய் பேச என்ன காரணம்..? இருக்கு பானாமா கால்வாய் தற்போது உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில் சிக்கிகொண்டு தவித்து வருகிறது.
பனாமா கால்வாய் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமா நாட்டில் அமைந்துள்ள ஒரு செயற்கை நீர்வழியாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைத்து சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கால்வாய் மூலம் ஒவ்வொரு இறக்குமதி பொருட்களின் விலையை குறைப்பத்து மட்டும் அல்லாமல் வேகமாக பொருட்களை கொண்டு சேர்க்கிறது.

மேலும் இந்த கால்வாய் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவுக்கு மத்தியில் முக்கியமான சரக்கு போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. இந்த கால்வாய் மூலம் ஐரோப்பாவில் இருந்து வரும் கப்பல் தெற்கு அமெரிக்கா சுற்றி செல்ல வேண்டிய 15,000 கிமீ பாதையை தவிர்க்க முடிகிறது.
பனாமா கால்வாய் வழியாக 12,000 கப்பல்கள்: இந்த கால்வாயின் இரு நுழைவாயில்களிலும் பால்போவா (Balboa) மற்றும் கிறிஸ்டோபல் (Cristóbal ) ஆகிய துறைமுகங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களுக்காக தான் தற்போது அமெரிக்காவும், சீனாவும் சண்டை போட்டு வருகிறது.
பனாமா கால்வாயில் உலகளாவிய கண்டெய்னர் போக்குவரத்தில் கிட்டத்தட்ட 39% ஆண்டுதோறும் சுமார் 3.74 மில்லியன் TEU கையாளுகின்றன. இந்த கால்வாய் மூலம் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களுக்கு எந்தக் கப்பலிலும் விரைவாகக் செல்ல முடியும். இந்த கால்வாய் இல்லையெனில் கப்பல்கள் சுமார் 8,000 கடல் மைல்கள் பயணிக்க வேண்டியிருக்கும்.

உலக வர்த்தகத்திற்க முக்கியமான வழித்தடமாக இருக்கும் பனாமா கால்வாயின் 2 துறைமுகளின் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் ஹாங்காங்கின் CK ஹட்சிசன் இப்பங்குகளை விற்க திட்டமிட்டு உள்ள வேளையில், இதை உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான MSC மற்றும் BlackRock இணைந்து வாங்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதற்கு சீன அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இந்த பங்கு விற்பனையை முடக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
பனாமா கால்வாய் ஏன் முக்கியம்: உலகின் மிக முக்கியமான வழித்தடமாக இருக்கும் இதை யார் கட்டுப்படுத்துவது என்பதில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் போட்டு உருவாகியுள்ளது. இந்தக் கால்வாய் மத்திய அமெரிக்காவின் மையப்பகுதி வழியாகப் இருக்கிறது. இதன் மூலம், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே ஒரு ஷாட்கட் உருவாக்குகிறது.
பனாமா கால்வாய் வர்த்தகம் : வருடம் முழுவதும் பரபரப்பாக காணப்படும் இந்தக் கால்வாய் எப்போதும் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இன்று, உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் சுமார் 5 சதவீத பங்கீட்டை கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 423 மில்லியன் டன் பொருட்கள் இந்த ஒற்றை பாதையில் செல்கிறது.
உதாரணமாக, இந்தாண்டின் தொடக்கத்தில், செங்கடலில் ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்து தடைபட்டன. இதனால், ஆசியாவில் இருந்து அமெரிக்க கிழக்கு கடற்கரைக்கு செல்லும் கப்பல் அனைத்தும் பனாமா கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டன.
மேலும், பனாமா கால்வாய் இயங்குவது நிறுத்தினால், உலகளாவிய வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்தும் வர்த்தகம் திடீரென நிறுத்தப்படலாம். இப்போது புரிகிறதா ஏன் அமெரிக்கா - சீனா இதற்கு அடித்துக்கொள்கிறது என்று..?
அமெரிக்கா கட்டுப்பாட்டில் பனாமா: முதலில் இந்த கால்வாய் ஒரு பிரெஞ்சு திட்டமாகத் தொடங்கியது. பின்னர், அமெரிக்காவால் கையகப்படுத்தப்பட்டது. 1904 முதல் 1999 வரையில் சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக, முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1999ல் தான் இது பானாமா அரசுக்கு கைமாறியது. இந்த வழித்தடத்தை யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காகவே, அமெரிக்கா கால்வாயைச் சுற்றி ஏராளமான இராணுவத் தளங்களையும் கட்டியுள்ளது.

ஆனால், கால்வாயின் மீது ஆதிக்கம் செலுத்த சீனா மறைமுகமாக போட்டிப்போட்டு வருகிறது. சீனா, தனது Belt and Road திட்டத்தின் கீழ் பனாமாவுடன் உறவை விரிவுபடுத்திக்கொண்டு வந்தது. இந்த நிலைமை, அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறி வருகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம், பசிபிக் கடலில் பனாமா கால்வாயின் நுழைவாயிலாக பால்போவா துறைமுகம் உள்ளது. மற்றொரு பக்கத்தில், அட்லாண்டிக் கடல் வாயிலைக் காவலாக இருப்பது கிரிஸ்டோபால் துறைமுகம் உள்ளது.
முக்கிய துறைமுகங்களை கைப்பற்ற முயற்சி : CK Hutchison என்பது ஹாங்காங்கில் தளம் கொண்ட நிறுவனம். இந்த நிறுவனத்திடம் தற்போது இவ்விரு துறைமுகத்தை நிர்வாகம் செய்யும் ஒப்பந்தம் உள்ளது. பனாமா அரசு 2021 ஆம் ஆண்டில் சுமார் 25 வருட ஒப்பந்தத்தை இந்த நிறுவனத்திடம் கொடுத்தது. இதனால் தற்போது இது சீன நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளது.
MSC நிறுவனத்தின் துறைமுக செயல்பாட்டு பிரிவு, Terminal Investment Ltd. (TiL) மற்றும் BlackRock நிறுவனத்தின் Global Infrastructure Partners (GIP) இணைந்து, இந்த ஒப்பந்தத்தை 22.8 பில்லியன் டாலர் மதிப்பில் இந்த இரண்டு துறைமுகங்களையும் கைப்பற்ற முயற்சிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், MSC-பிளாக்ராக் பனாமா கால்வாயை மொத்தமாக கைப்பற்றும். ஆனால் CK Hutchison நிறுவனம் தொடர்ந்து சிறிய அளவிலான பங்குகளை வைத்திருக்கும். ஆனால் பிரச்சனை இங்குதான் ஆரம்பிக்கிறது.

ஒப்பந்தத்தை தடுக்க பிளான் போடும் சீனா : CK Hutchison-க்கும் சீன அரசுக்கும் நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிழலில் இயங்குகிறது. மாற்றாக, MSC மற்றும் BlackRock ஆகியவை மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இயங்கும் நிறுவனங்கள் ஆகும்.
அதனால், சீனாவின் பார்வையில், இது மேற்கத்திய நாடுகள் அதிக்கம் செலுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சீன அரசின் ஊடகங்கள் மற்றும் புவியியல் அரசியல் விமர்சகர்கள், அமெரிக்க கண்டத்தில் முக்கியமான உட்கட்டமைப்பை இழக்கும் நடவடிக்கையாக கூறுகின்றனர். சீனா இந்த ஒப்பந்தத்தை இழக்க கூடாது என்பதற்காக அனைத்து விதமான வேலைகளையும் செய்து வருகிறது.
இதே நேரத்தில், சீன அதிகாரிகள், CK Hutchison நிறுவனத்தின் மீது, இந்த விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வகையில் அதிகப்படியான நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். சீன அரசு, இந்த ஒப்பந்தத்தை தடுக்க antitrust law முதல் தேசிய பாதுகாப்பு சட்டங்கள் வரை எதையும் பயன்படுத்த தயாராக உள்ளது.
கவலையில் சீன அரசு : இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஜூலை 27 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தேதிக்கு முன்பே இந்த ஒப்பந்தத்தை முறிக்க சீன அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இல்லையெனில் குறைந்தபட்சம் அமெரிக்காவிடம் இருந்து சில வரி சலுகைகளைப் பெற, இதை லெவரேஜ் ஆக பயன்படுத்த முயற்சி செய்கிறது.
சமீபத்திய தகவல்களின்படி, சீன அரசுக்கு சொந்தமான COSCO கப்பல் நிறுவனம், MSC தலைமையிலான கூட்டணியில் சிறிய பங்கு வாங்க முயற்சி செய்து வருகிறது. இது வெற்றிகரமாக இருந்தால், சீனா இந்த துறைமுக நிர்வாகத்தில் மீண்டும் ஒரு இடத்தை பெறலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications