அமெரிக்க-மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க-கனடா எல்லைகளில், விசா இல்லாத இந்திய குடும்பங்கள், 6 முதல் 17 வயது வரையிலான தங்கள் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது. இதுவரையில் நாம் கேள்விப்பட்ட விஷயமெல்லாம் இந்தியர்கள் குடும்பம் குடும்பமாக காடுகள், மலைகளை தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது திட்டமிட்டே குழந்தைகளை தனியாக அமெரிக்க எல்லையில் விட்டுவிட்டு செல்வது அதிகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
அமெரிக்க-கனடா - மெக்ஸிகோ எல்லைகளுக்கு வரும் இந்த குழந்தைகள் கையில் எவ்விதமான ஆவணமும் இருப்பது இல்லை, கையில் இருப்பதெல்லாம் சில நாட்களுக்கான உணவு, ஒரிரு உடைகள் மற்றும் பெற்றோரின் தொடர்பு விவரங்கள் அடங்கிய ஒரு காகிதம் மட்டுமே.

இப்படி குழந்தைகளை தன்னந்தனியாக அமெரிக்கா எல்லையில் விடுவிட்டா் எல்லை பாதுக்காப்பு படைகள் அவர்களை பாதுகாப்பாக அமெரிக்குவுக்கு அழைத்து செல்வார்கள், இதந் மூலம், குழந்தைகள் வாயிலாக அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என பெற்றோர் நம்புகின்றனர்.
2024 அக்டோபர் முதல் 2025 பிப்ரவரி வரையிலான 5 மாத்தில் மட்டும் சுமார் 77 இந்திய குழந்தைகள் தனியாக எல்லைகளில் கண்டறியப்பட்டுள்ளனர், இது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், குறிப்பாக பஞ்சாப், குஜராத், போன்ற மாநிலங்களைச் சேர்ந்த குடும்பங்கள், அமெரிக்காவில் சிறந்த வாழ்க்கை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை எதிர்பார்த்து, தங்கள் குழந்தைகளை இந்த ஆபத்தான பயணத்திற்கு அனுப்புகின்றனர். இந்த குழந்தைகள், பெரும்பாலும் 6 முதல் 17 வயது வரையிலானவர்களாக உள்ளனர்.
அமெரிக்க குடியேற்றச் சட்டங்கள், தனியாக வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு மற்றும் குடியேற்ற நடவடிக்கைகளை வழங்குகின்றன. இந்த சட்ட இடைவெளிகளைப் பயன்படுத்தி, குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தனியாக அனுப்புவதன் மூலம், அவர்கள் அமெரிக்காவில் தஞ்சம் பெறவோ அல்லது நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவோ வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.
இந்த குழந்தைகள், அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்ட பின்னர், தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர், அங்கு அவர்களின் பயணம், பூர்வீகம் போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. குழந்தைகளை ஆபத்தில் இருந்தாலும், அதன் மூலம் பெற்றோர்கள் தங்களுடைய 'அமெரிக்க கனவை' எளிதாக அடையலாம் என்ற எண்ணத்தில், நம்பிக்கையில் இத்தகைய ரிஸ்க்களை எடுக்கின்றனர்.
2024 அக்டோபர் முதல் 2025 பிப்ரவரி வரை, அமெரிக்க எல்லைகளில் 77 இந்திய குழந்தைகள் தனியாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில், 53 குழந்தைகள் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையிலும், 22 குழந்தைகள் அமெரிக்க-கனடா எல்லையிலும் கண்டறியப்பட்டனர். மேலும், சில குழந்தைகள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து பிடிபட்டனர். இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு கொண்டுவரப்பட்ட கடுமையான எல்லை பாதுக்காப்பு நடவடிக்கைகள் தான்.
2022ஆம் ஆண்டில் 409 இந்திய குழந்தைகளும், 2023ஆம் ஆண்டில் 730 குழந்தைகளும் (அதிகபட்ச உயர்வு), 2024ஆம் ஆண்டில் 517 குழந்தைகளும், 2020ஆம் ஆண்டில் 219 குழந்தைகளும், 2021ஆம் ஆண்டில் 237 குழந்தைகளும் அமெரிக்கா எல்லையில தனித்து விடப்பட்டனர்.
கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், 2020 மற்றும் 2021 ஆண்டுகளில், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆனால், தொற்றுநோய் பிந்தைய காலத்தில், 2022 முதல், சட்டவிரோத குடியேற்ற வழிகள், குறிப்பாக குழந்தைகளை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன.
அமெரிக்காவில், தனியாக வரும் குழந்தைகள், 'அன்அகம்பனிட் மைனர்ஸ்' (யுஏசி) என்ற பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர். இவர்களுரக்கு, சட்ட உதவி மற்றும் தற்காலிக தங்குமிடங்களை அமெரிக்க அரசு வழங்குகிறது, ஆனால் அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. சில குழந்தைகள், அமெரிக்காவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர், மற்றவர்கள் தாய்நாட்டிற்கு திருப்பு அனுப்பிவிடப்படுகிறார்கள்.
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications