இந்தியாவை பாதாளம் நோக்கி கொண்டு செல்லும் அமெரிக்கா - ஈரான் பிரச்சனை.. கதறும் மத்திய அரசு..!

இந்தியா பொருளாதாரம் குறித்து நாம் புதிதாக சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன், செப்டம்பர் மாத காலாண்டுகளில் ஜிடிபி படு வீழ்ச்சி கண்டது.

இன்னும் இதை தெளிவாகக் சொல்லப்போனால் தொழில்துறை, சேவைத் துறை, அரசு நிறுவனங்கள் என பல துறைகளும் ரவுண்டு கட்டி அடி வாங்கி கொண்டிருக்கின்றன.

இப்படி ஒரு நிலையில் பல லட்சம் மக்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். அரசு ஒரு புறம் இதை தவிர்க்க பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. ஆனால் அது எதுவும் இதுவரை கைகொடுத்ததாகவே தெரியவில்லை.

பொருளாதாரத்தில் சறுக்கல்

பொருளாதாரத்தில் சறுக்கல்

ஏன் ஒரு அடி பொருளாதாரம் ஏற்றம் கண்டால், ஒன்பது அடி சறுக்கி வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் இதை இன்னும் மேம்படுத்தும் விதமாக அமெரிக்கா ஈரான் பிரச்சனை தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. ஏற்கனவே வர்த்தக போரால் அடி வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் ஈரான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஈரான் எப்படி காரணமாக இருக்க முடியும்?

ஈரான் எப்படி காரணமாக இருக்க முடியும்?

இந்தியாவில் உபயோகப்படுத்தும் எரிபொருள் அளவில் 80% இறக்குமதி செய்யப்படுவது தான். இதே இயற்கை எரிவாயு தேவைகளில் 40% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்கா ஈரான் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை 70 டாலர்களுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகிறது. மேலும் இந்த ஏற்றமானது தொடரும் என்றும் கூறப்படுகிறது.

விலை அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது

விலை அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது

அமெரிக்கா ஈரான் பதற்றம் எப்போது குறையுமோ அப்போது தான் விலையும் குறையும் என்றும் கூறப்படுகிறது. ஆக கடந்த டிசம்பரில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 65 டாலர்களாக இருந்த நிலையில், இன்று அது 70 டாலராக அதிகரித்துள்ளது. ஆக நாம் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய்க்கும் 5 டாலர்கள் அதிகம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதனால் இந்தியா எரிபொருளுக்காக அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளது.

ஈரான் நடவடிக்கை என்ன?

ஈரான் நடவடிக்கை என்ன?

ஓரு வேளை அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதில் கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதல் நடத்தினாலோ அல்லது மற்ற நாடுகளின் மேல் தாக்குதல் நடத்தினால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும். இந்த விலையேற்றம் ஏற்கனவே சரிவில் உள்ள இந்தியாவின் பொருளாதாரத்தில் மேலும் சரிவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. ஏனெனில் இது நிச்சயம் பணவீக்கத்தைக் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அண்டை நாடுகளை கையேந்தும் நிலை

அண்டை நாடுகளை கையேந்தும் நிலை

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து அரசு வெற்றிகரமாக அரசாங்கங்கள் பேசியிருந்தாலும், நாட்டின் உள்நாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியானது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் இந்தியா மேலும் அண்டை நாடுகளையே கையேந்தும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் இந்தியாவின் நுகர்வு 84.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 83.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு உபயோகம்

எவ்வளவு உபயோகம்

கடந்த 2018- 2019ல் இந்தியா $111.9 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் $87.8 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. ஆக ஆண்டுக்கு ஆண்டு எண்ணெய் உபயோகம் அதிகரித்து வருவதும், அதற்காக செலவிடப்படும் தொகையையும் அதிகரித்து வருவதும் கவனிக்கதக்கது. இது இந்தியாவில் மிகப்பெரிய பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ஈரான் எண்ணெய்

ஈரான் எண்ணெய்

இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்கும் போது பல சலுகைகளை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவினால் அதை இந்தியா இழந்தது என்று தான் கூற வேண்டும். ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்து சவுதியில் இருந்து அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியா. இதனால் இந்தியா கடந்த ஆண்டு கொடுத்ததை விட, நடப்பு ஆண்டில் கச்சா எண்ணெய்க்காக அதிகம் செலவிட வேண்டியிருக்கும் என்றும் கருதப்படுகிறது.

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

ஏற்கனவே நாட்டில் சில்லறை பணவீக்கம் தலை விரித்தாடி வரும் நிலையில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் தற்போதுள்ள கச்சா எண்ணெய் விலை உடனடி அதிகரிப்பானது உடனடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கேர் மதிப்பீடுகள் கூறுகின்றன. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலையானது 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை அதிகரித்துள்ள நிலையில், அடுத்து வரும் சில நாட்களுக்கும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் அதிகரிக்கும்

இதெல்லாம் அதிகரிக்கும்

தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலையானது, மேலும் சில்லறை பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை சரிகட்ட அரசு எரிபொருளுக்கான வரிகள் குறைப்பதை தீவிரம் காட்டலாம். ஆனால் இது அரசின் வருவாயில் துண்டு விழும், மேலும் நிதிப் பற்றாக்குறையும் தலைவிரித்தாடலாம். ஆக மொத்தம் மேலும் இந்தியாவுக்கு பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+