அமெரிக்க ஜனாதிபதியா இப்படி செய்தார்.. அதுவும் ஒரு நாளைக்கு 2000 டாலரா.. என்ன கொடுமை இது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் டொனால்டு டிரம்ப் என்ற பெயரை கேட்டாலும், பல நாடுகள் அமெரிக்காவிடம் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று ஒதுங்கி போனார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான்.

ஏன் அவரின் கடுமையான கோபமும், எல்லாவற்றையும் தாண்டி அமெரிக்காவிற்கு தான் எங்கும் எதிலும் முதல் உரிமை கொடுக்க வேண்டும் என்ற நல்ல உள்ளமும் கொண்டவர்.

தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்பதை கொள்கையாக கொண்டவர். இந்த நிலையில் இவர் மீதான பல குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டாலும், அவை நிரூபிக்கப்படவில்லை.

டிரம்ப் மிகக் கடுமையானவர்
 

டிரம்ப் மிகக் கடுமையானவர்

அமெரிக்கர்களுக்கு முதல் உரிமை. அப்புறம் தான் மற்ற நாடுகளுக்கு. உலகின் மிகப்பெரிய முதல் வல்லரசு நாடாக இருந்தாலும், அதை மேலும் வளர்க்க உழைத்தவர். அவர் செய்யும் செயல்கள் தவறாக இருக்கலாம். ஆனால் அவரின் நோக்கம் சரியானது தான் என்றும் அவரின் ஆதாரவளர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஒர் அறிக்கையில் கூறியிருந்தனர். இந்த நிலையில் மிக கடுமையானவர் என்பதாலேயே அவரை சிலருக்கு பிடிக்காது.

டிரம்ப் மீது குற்றச்சாட்டு

டிரம்ப் மீது குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாகவே டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக அந்த நாட்டு பாராளுமன்றம் குழு விசாரணைக்கு டிரம்பை அழைத்தது. ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடனின் செயல்பாடுகளை விசாரிக்க உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலாக தனது அரசியல் எதிரியான ஜோ பைடனை களங்கப்படுத்தும் நோக்கில் உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை நிறுத்தி வைத்தாக கூறப்படுவதையும் டிரம்பு மறுத்து வந்தார்.

அரசின் மூலம் சொந்த நிறுவனத்திற்கு வருமானம்

அரசின் மூலம் சொந்த நிறுவனத்திற்கு வருமானம்

இந்த நிலையில் தற்போது டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த முதல் ஐந்து மாதங்களில் மட்டும், தினசரி ரகசிய சேவை மூலம், டிரம்ப்பின் வர்த்தகத்தின் மூலம் தினசரி 2000 டாலர், (அதன் இந்திய மதிப்பில் இன்று 1.43 லட்சம் ரூபாய்) வருமானம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வருமானத்திற்கு சரியான ஆதாரங்களும் இருப்பாதாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்
 

தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் படி, அரசாங்க கண்காணிப்பு குழு டிரம்ப் சொத்துகளுக்கு செய்த ரகசிய சேவையாக செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பேமென்ட்டுகள் பற்றி விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 40 பேமெண்டுகள் டிரம்புக்கு சொந்தமான சொத்துகள் தேசிய கோல்ஃப் கிளப்புக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த வருமானம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

எவ்வளவு தொகை?

எவ்வளவு தொகை?

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பல கோல்ஃப் கிளப்புகளை வைத்திருக்கிறார். எனினும் அது எந்தெந்த இடங்களில் உள்ளது, அவற்றுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த ஆவணம் எதுவும் குறிப்பிடவில்லை. டிரம்ப்பின் விர்ஜினியா மற்றும் நியூ ஜெர்ஷியில் உள்ள கோல்ஃப் கிளப்புகளுக்கு அதிகளவிலான பேமென்டுகள் சென்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.

டிரம்பின் உறவினரும் சம்பந்தம்

டிரம்பின் உறவினரும் சம்பந்தம்

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டண விகிதங்கள் பல இந்த அறிக்கைகளுடன் ஒத்து போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த குற்றசாட்டில் டிரம்பின் நெருங்கிய உறவினர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது. மேலும் டிரம்ப் தனது கோல்ஃப் ரிசார்ட்டுகளில் 224 நாட்கள் கழித்திருப்பதாகவும், குறைந்தது 105 சந்தர்பங்களில் கோல்ஃப் விளையாடுவதைக் காணவும் சென்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அரசு செலவில் சொந்த நிறுவனத்திற்கு பயணம்

அரசு செலவில் சொந்த நிறுவனத்திற்கு பயணம்

இதை டிரம்ப் கிளப்பிற்கு செல்ல அரசு சுமார் $ 110,000,000 டாலர்களை செலவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டிரம்பின் இந்த சீக்கிரெட் வர்த்தகத்தை அவரது மகன் எரிக் டிரம்ப் பார்த்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை பெற இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆரம்பத்தில் தகவல் சுதந்திர சட்டம் மூலம் கோரிக்கையை தாக்கல் செய்த போதும், இந்த ஆவணங்கள் வழங்கப்படவில்லையாம்.

ரகசிய சேவை மூலம் வருமானம்

ரகசிய சேவை மூலம் வருமானம்

இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையிலேயே இந்த தகவல்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய சேவை மூலம் இதுவரை 1.7 மில்லியன் டாலர் சம்பாதிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America president Donald Trump earned Rs.1.43 lak per day from secret service in 1st five months

America president Donald Trump earned $ 2000 per day from secret service in 1st five months. And Washington Post was able to match several of the payment dates with Mr Trump’s visits to his golf clubs in Virginia and New Jersey. So he earned more and more his family business. Trump's son eric trump was run this business.
Story first published: Friday, November 22, 2019, 17:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more