மீண்டும் அமெரிக்காவே டாப்.. இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளி.. !

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்தாலும், 2019 - 2020ம் நிதியாண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நிதியாண்டில் அமெரிக்கா இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்து வந்தது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை அதிகரிப்பதைக் காட்டுகிறது.

வர்த்தக அமைச்சின் தரவுகளின் படி, 2019 - 2020ம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 88.75 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 87.96 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா சிறந்த வர்த்தக பங்காளி

அமெரிக்கா சிறந்த வர்த்தக பங்காளி

இந்தியாவில் வர்த்தகம் செய்யும் முக்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 16.86 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகம், கடந்த 2019 - 2020ம் நிதியாண்டில் வர்த்தகம் 17.42 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 2018 - 2019ம் ஆண்டில் தான் சீனாவினை விஞ்சி இந்தியாவின் சீனாவின் வர்த்தக பங்காளியாக மாறியது.

அதிகரிக்கும் வர்த்தகம்

அதிகரிக்கும் வர்த்தகம்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2018- 2019ல் 81.87 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த 2019 - 2020ல் 87.08 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையானது முந்தைய நிதியாண்டில் 53.57 பில்லியன் டாலர்களாக இருந்தது. எனினும் 2019- 2020ம் ஆண்டில் 48.66 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

வர்த்தக பங்காளி

வர்த்தக பங்காளி

கடந்த 2013 -2014 முதல் 2017 - 2018 வரையில் சீனா இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்தது. சீனாவுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனா மீதான இறக்குமதி சார்பு நிலையை குறைத்து உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில், இந்தியா சில நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது.

உறவுகளை வலுப்படுத்த நம்பிக்கை

உறவுகளை வலுப்படுத்த நம்பிக்கை

எனினும் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுபடுத்தும் பொருட்டு, இருதரப்பிலும் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு வருகிறது. ஆக டெல்லி மற்றும் வாஷிங்டன் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் போக்கு வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்றும் வர்த்தக நிபுணர்கள் நம்புகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+