சீனாவினை மிரட்டி பார்க்கும் அமெரிக்கா.. விஸ்வரூபம் எடுக்கும் மாஸ்க் பிரச்சனை.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் மாஸ்க் தயாரிப்பாளர் 5 லட்சம் குறைபாடுடைய மாஸ்குகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ததாக அமெரிக்கா நீதித் துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான பிசினஸ் டுடே செய்தியில், சீனா வழங்கிய குறைபாடுடைய 5 லட்சம் N95 சுவாச கருவிகள் குறைபாடுடையவை என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், அமெரிக்காவிற்கு உற்பத்தி செய்து, தரமற்ற பொருட்களை ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இது கிட்டதட்ட அரை மில்லியன் மாஸ்குகள் குறைபாடுள்ள மாஸ்குகளாக உள்ளது.

எவ்வளவு அபராதம்?
 

எவ்வளவு அபராதம்?

ஏற்கனவே ஒவ்வொரு விஷயத்தில் சீனா அமெரிக்கா இடையே பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இது மேலும் பதற்றத்தினை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் கிங்க் இயர் பேக்கேஜிங்க் மற்றும் பிரிண்டிங்க் என அடையாளம் காணப்பட்ட இந்த நிறுவனத்திற்கு 5 லட்சம் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மாஸ்கிற்கு நான்கு மாஸ்க்

ஒரு மாஸ்கிற்கு நான்கு மாஸ்க்

அல்லது எண்ணிக்கையிலோ அல்லது மாஸ்க் ஒவ்வொன்றிற்கும் பதிலாக நான்கு மாஸ்குகளாக கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பொருட்கள் பதுக்கல் மற்றும் விலைக் குழுவானது இந்த சீன நிறுவனத்தினை அடையாளம் காண நீதித்துறையால் உருவாக்கப்பட்ட இந்த குழுவானது, இதனை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்

அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்

கிங்க் இயர் பேக்கேஜிங்க் மற்றும் பிரிண்டிங்க் கோ மூன்று குற்றச்சாட்டுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தரமற்ற என்95 மாஸ்கினை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ததாக மருந்து மற்றும் ஒப்பனைச் சட்டம் FDCA குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பல நாடுகளுக்கு தரமற்ற கருவிகள் சப்ளை
 

பல நாடுகளுக்கு தரமற்ற கருவிகள் சப்ளை

இது அமெரிக்காவிற்கு மட்டும் அல்ல, மற்ற சில நாடுகளுக்கும் தரமற்ற முகமூடிகள் மற்றும் தவறான சோதனைக் கருவிகளைக் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனாவை பரப்பியது சீனா தான், சீனா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது தரமற்ற பொருட்களை, அதுவும் கொரோனாவை சம்பந்தபட்ட பொருட்களை சப்ளை செய்ததாக தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America sues china manufacturer for misbranded N95 masks

Chinese mask manufacturer charged by America justice department for exporting around 5 lakh faulty masks to the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X