அமெரிக்கா சீனா மத்தியிலான வர்த்தகப் போர் மற்றும் வரி விதிப்புகள் பெரிய அளவில் குறைந்திருந்தாலும் இரு நாடுகள் மத்தியிலான போட்டி தொடர்ந்து அதிகரித்துத் தான் வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா தலைமையில் இந்தியா உட்பட 13 நாடுகள் சீனா-வின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அடுத்த 2 முதல் 3 வருடத்தில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள்
சீனாவையும், சீன நிறுவனங்களையும் நம்பியிருக்கும் நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காகக் கோல்மேன் சாச்சஸ் முதல் ஐபிஎம், DHL, ப்ரூக்பீல்டு போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் அடுத்த 2 முதல் 3 வருடத்தில் இந்தியாவில் புதிதாக முதலீடு செய்யவும், ஆப்ரேஷன்ஸ்-ஐ விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இதில் சில செமிகண்டக்டர் நிறுவனங்களும் அடக்கம் என்பது கவனிக்கப்பட வேண்டியவை.
நிர்மலா சீதாராமன்
கடந்த வாரம் கோல்டுமேன் சாச்சஸ் நிறுவன அதிகாரிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் போது இந்தியாவில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை 3 மடங்கு அல்லது குறைந்தபட்சம் 2 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்தனர். கோல்மேன் சாச்சஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அதிகப்படியான ஊழியர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பியூஷ் கோயல்
இதேபோல் DHL நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் இரண்டு பெரிய லாஜிஸ்டிக்ஸ் தளத்தைத் திறந்து தனது சேவை மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது. இதேபோல் ஐபிஎம், ப்ரூக்பீல்டு முதல் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வரையில் பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் புதிய முதலீட்டைச் செய்யவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக டாவோஸ் உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
PLI திட்டம்
இந்தியாவில் புதிய முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு ஏற்கனவே 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான PLI திட்டத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்து வருகிறது. இதேவேளையில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும்.
வேலைவாய்ப்பு
அனைத்திற்கும் மேலாக வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகைச் செய்யும். இதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications