ஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் போனஸ்.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்!

எத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேலே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஊழியர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக நம்ப முடியாத அளவுக்கு போனஸை வாரி வழங்கியுள்ளது.

எத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேலே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஊழியர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக நம்ப முடியாத அளவுக்கு போனஸை வாரி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம் தான் இப்படி வாரி வழங்கியுள்ளது.

தாறுமாறான போனஸ்

தாறுமாறான போனஸ்

மேரிலாந்தை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்களாம். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால், ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. நம்மூர் தீபாவளி போனஸ் போல் அல்ல. இது தாறுமாறான போனஸ். பொதுவாக நம்மூரில் போனஸ் என்றாலே ஒரு மாத சம்பளம், அல்லது இரு மாத சம்பளம் தான் கொடுப்பார்கள். ஆனால் அந்த அமெரிக்க நிறுவனத்தின் ஊழியர்கள் யாரும் எதிர்பாராத அளவு, ஒவ்வொருவருக்கும் 35 லட்சம் ரூபாய் போனஸ் ஆக வழங்கப்பட்டுள்ளதாம்.

இலக்கினை அடைந்ததற்காக பரிசு

இலக்கினை அடைந்ததற்காக பரிசு

இந்த அமெரிக்கா நிறுவனம் தனது இலக்கினை எட்டியதாக கூறி, சனிக்கிழமையன்று ஒரு விழாவை நடத்தியுள்ளது. அந்த விழாவில் கலந்து கொண்டுள்ள அதிர்ஷ்டசாலி ஊழியர்களுக்கு தெரியவில்லை. தங்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்று. அந்த நிறுவனத்தின் நிறுவனர் எட்வர்ட் செயின்ட் ஜான் 81 வயதான இவர், ஒவ்வொரு ஊழியர்களுக்கும் சிவப்பு உறை ஒன்றை வழங்கியுள்ளார்.

சிவப்பு உறையில் என்ன?

சிவப்பு உறையில் என்ன?

அந்த சிவப்பு உறையை திறந்து பார்த்த ஊழியர்களுக்கு அதில் ஒரு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. அதில் ஒவ்வொருவருக்கும் 38,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய்) இருந்துள்ளது. இதனால் ஊழியர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் தவித்துள்ளனர். நம்மூரில் எல்லாம் போனஸ் என்றால் 50,000 ரூபாய், ஒரு லட்சம் தான். ஆனால் 35 லட்சம் ரூபாயை ஒரு நிறுவனம் போனஸ் வழங்கியது கண்டு, ஊழியர்களே ஆச்சரியத்தில், திகைப்பில் உள்ளனராம்.

ஊழியர்களுக்கு வெகுமதி

ஊழியர்களுக்கு வெகுமதி

இது குறித்து அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஜான் கூறுகையில், நிறுவனத்தின் இலக்கை அடைந்ததற்காக ஊழியர்களுக்கு, பெரிய அளவில் வெகுமதி கொடுக்க நினைத்ததாகவும், இது ஊழியர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஜான் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் இல்லாமல் நான் இல்லை

ஊழியர்கள் இல்லாமல் நான் இல்லை

மேலும் எங்களின் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அவர்களின் கடிமான உழைப்பும் மற்றும் அர்பணிப்புக்காக நான் நன்றி கூறுகிறேன். இந்த நன்றியைக் காட்ட எனக்கு இதைவிட சிறந்த வழி எனக்கு தெரியவில்லை. அப்படியொரு சிறந்த வழியைப் பற்றி என்னால் யோசிக்கவும் முடியவில்லை. நான் படகில் செல்லலாம். ஆனால் அவர்கள் தான் அந்த படகினை ஒட்டிச் செல்கின்றனர். எங்களது ஊழியர்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை என்றும், தனது ஊழியர்களை புகழ்ந்து தள்ளியுள்ளராம் ஜான்.

மாயஜலமா என்ன?

மாயஜலமா என்ன?

இது குறித்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கூறுகையில், இன்றிரவு நடந்தது ஒரு மாயாஜலம் போல் இருக்கிறது. இது எங்களது வாழ்க்கையையே மாற்றியுள்ளது. என்றும் ஊழியர்கள் ஆனந்த கண்ணீரில் கூறியுள்ளனர். இந்த நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மட்டும் 3.5 பில்லியன் டாலர்கள் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+