அமெரிக்கா: அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிதி நிறுவனம் தெலுங்கு பேசும் மக்கள் என்பதற்காகவே 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் ஊக்கத்தொகை திட்டத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Federal National Mortgage Association என்பது அமெரிக்க அரசின் கீழ் செயல்படக் கூடிய ஒரு அடமான நிதி நிறுவனமாகும். சொத்து அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் இது. இதனை சுருக்கமாக Fannie Mae என அழைக்கின்றனர். இந்நிறுவனம் திடீரென 700 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இவர்களில் 200 பேர் தெலுங்கு பேசும் மக்கள் ஆவர்.

அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக்கூடிய இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் பலரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி ஊழியர்கள் தொண்டு அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கினால் அதனை சுட்டிக்காட்டி தங்களுடைய சம்பளத்துடன் சேர்த்து அந்த தொகையை பெறலாம்.
அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்களும் இந்த நடைமுறையை பின்பற்றுகின்றன. ஆனால் ஊழியர்கள் இதனை தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக தெலுங்கு பேசும் ஊழியர்கள் ,அமெரிக்காவில் செயல்படக்கூடிய தெலுங்கு கூட்டமைப்புகளுடன் இணைந்து போலியாக நன்கொடைகளை வழங்கி சான்றிதழை காட்டி நிறுவனத்திடம் இருந்து முறைகேடாக சம்பளத்தை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த தெலுங்கு பேசும் மக்கள் பலரும் வட அமெரிக்கா தெலுங்கு கூட்டமைப்புடன் இணைந்து போலியாக நன்கொடை சான்றிதழ்களை பெற்று நிறுவனத்திடம் வழங்கியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நன்கொடை வழங்காமலேயே வழங்கியதாக காட்டி கூடுதல் சம்பளம் பெற்று வந்துள்ளனர்.
வட அமெரிக்கா தெலுங்கு கூட்டமைப்பின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்த நபரும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுள் அடங்குவார், அதேபோல அமெரிக்க தெலுங்கு கூட்டமைப்பின் முன்னாள் தலைவரின் மனைவியும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது மற்றும் பத்தாம் தேதிகளில் இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெலுங்கு பேசும் மக்கள் என்பதற்காகவே திடீரென 200 பேரை பணிநீக்கம் செய்திருப்பது சரியல்ல என இந்திய அமெரிக்கரும் விர்ஜினியா பகுதி எம்பியுமான சுகாஸ் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக நிறுவனம் உரிய விளக்கம் தர வேண்டும் என கேட்டு இருக்கிறார். முன்னதாக ஆப்பிள் நிறுவனமும் இதே போல ஊக்கத்தொகை திட்டத்தை ஊழியர்கள் தவறாக பயன்படுத்தியதாக கூறி 100 பேரை பணி நீக்கம் செய்தது.
முன்னதாக கலிபோனியாவின் வடக்கு மாவட்ட நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வட அமெரிக்க தெலுங்கு கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஆஜராகி 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை தாங்கள் பெற்ற நன்கொடை எவ்வளவு, அதை எதற்காக பயன்படுத்தினோம் என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications