அமெரிக்காவை ஆளும் இந்தியா.. சீனாவை மொத்தமா ஓரம்கட்டியாச்சு..!!

அமெரிக்க மக்கள் காலை எழுத்துப் பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் முதல் குழந்தைகள் விளையாடும் பொம்மை, கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் வரையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் சீனாவில் ஒரு தும்பினால் அமெரிக்காவில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது, அந்த அளவுக்கு அமெரிக்கா பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் சீனா ஆதிக்கம் செய்தது.

ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக மாறியது என்றால் மிகையில்லை, அமெரிக்காவின் ஷாப்பிங் ஷெல்ப்களில் தற்போது சீனாவின் இடத்தை இந்தியா பிடித்துள்ளது என்றால் மிகையில்லை. சமீபத்தில் சர்வதேச அளவில் சீனாவுடனான உறவு பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் இந்தியாவிடம் இருந்து அதிகப்படியான பொருட்களை வாங்கத் துவங்கியுள்ளது.

அமெரிக்காவை ஆளும் இந்தியா.. சீனாவை மொத்தமா ஓரம்கட்டியாச்சு..!!


கடந்த 5 வருடத்தில் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தகப் போர், தொற்றுநோய் பாதிப்பு, இயற்கைப் பேரழிவுகள், கடுமையான விநியோகத் தடைகள், பிரெக்சிட், உக்ரைன் போர் மற்றும் அதன் மூலம் நடந்த நட்புறவு பாதிப்பு, தொழில்துறைக் கொள்கைகளில் மாற்றம் ஆகியவை உலகளாவிய உற்பத்தி மற்றும் சப்ளை செயின் மேம்-ஐ மாற்றியுள்ளது.

2018ல் இருந்து 2022 வரையிலான காலகட்டத்தில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவு சுமார் 10% குறைந்த இதேவேளையில், இந்தியாவில் இருந்து 44 சதவீதமும், மெக்சிகோவில் இருந்து 18 சதவீதமும், தென்கிழக்கு ஆசிய நாடுகளான ASEAN கூட்டமைப்பில் இருக்கும் 10 நாடுகளில் இருந்து இறக்குமதி 65% உயர்ந்துள்ளது எனப் பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் சமீபத்திய ஆய்வுகள் காட்டுகிறது.

இதைத் துறைவாரியாகப் பார்க்கவேண்டுமெனில் உதாரணமாகச் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மெக்கானிக்கல் எந்திரங்களின் அளவு 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 28% குறைந்துள்ளது. இதேவேளையில் மெக்சிகோ நாட்டில் இருந்து 21%, ASEAN கூட்டமைப்பு நாடுகளில் இருந்து 61% மற்றும் இந்தியாவில் இருந்து 70% அதிகரித்துள்ளது என BCG நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியா பெரும் வர்த்தகத்தைக் கைப்பற்றியுள்ளது, ஐபோன் முதல் விவசாய உரம் வரையில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 23 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.

2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 44% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சீனா நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் 10% சரிவைச் சந்தித்ததுள்ளது முக்கியமான விஷயம்.

இதன் மூலம் அமெரிக்க ஷாப்பிங் ஷெல்ப்-களில் மேன் இன் சீனா பொருட்கள் இருந்த இடத்தில் தற்போது மேடு இன் இந்தியா, மேக் இன் இந்தியா பொருட்கள் அலங்கரித்துள்ளது. இதற்கு முக்கியமான உதாரணம் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான வால்மார்ட்.

வால்மாரட் நிறுவனம் இந்தியாவில் இருந்து பெறப்படும் பொருட்களின் அளவையும், பிரிவுகளையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதாவது அமெரிக்காவில் உள்ள அதன் கடைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகளவில் விற்பனை செய்கின்றன. 2027 ஆம் ஆண்டுக்குள் வால்மார்ட்-ன் இந்திய இறக்குமதிகளின் மதிப்பு 10 பில்லியன் டாலரை தொடும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+