சீனாவின் செமிகண்டக்டர் உற்பத்திக்கு அமெரிக்காவுக்கு தடை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. செமிகண்டக்டர் உற்பத்தியில் ஜாம்பவான் ஆக இருந்த சீனாவுக்கு இது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது எனலாம்.
இது இந்தியாவுக்கு மிக சாதமாக அமைந்தது எனலாம். இந்தியா செமிகண்டக்டர்களின் புகலிடமாக மாறுவதற்கு சிறந்த வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் அமெரிக்காவின் தடையானது இந்தியாவுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சீனாவுக்கு மாற்று இந்தியா
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு செமிகண்டக்டர் உற்பத்தியினை அதிகரிக்கும் விதமாக இந்தியாவினை உருவாக்க முயற்சித்து வருகின்றது.
சீனாவின் நிலை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுள்ளது இந்தியா. தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து சற்றே விடுபடத் தொடங்கி, கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன் காரணமாக தனது வளர்ச்சியினை மேம்படுத்த தொடங்கியுள்ளது.
இந்திய அரசும் திட்டம்
அதேசமயம் இந்திய அரசும் கிடைத்த வாய்ப்பினை விட்டு விடக்கூடாது என்ற நோக்கில், தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. எந்தவிதமாக பிரச்சனையும் இல்லாமல், செமிகண்டக்டர் சப்ளை செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றது.
தற்போது சர்வதேச நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தங்களது உற்பத்தியினை மாற்ற திட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியினை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
செமிகண்டக்டர் சந்தை
செமிகண்டக்டர் சந்தையானது அடுத்த தசாப்தத்தில் மேற்கொண்டு வளர்ச்சிக்கு தயராக உள்ளது. உலகளாவிய செமிகண்டக்டர் சந்தையானது 2030ம் ஆண்டில் 600 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு வளர்ச்சி காணலாம் என கவுண்டர் பாயிண்ட் ஆய்வறிக்கையானது தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சவால்
இதே இந்தியாவில் 2021 - 2026ம் ஆண்டில் செமிகண்டக்டர் சந்தையின் வருவாய் விகிதமானது 300 பில்லியன் டாலராக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது புவிசார் நிலை சாதகமாக இருந்தாலும், செமிகண்டக்டர் உற்பத்திக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி இல்லை எனலாம். இதற்காக இந்தியா பல சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது.
அரசின் முயற்சி
இந்திய இதுவரையில் சீனாவில் இருந்து பெரியளவிலான செமிகண்டக்டர் நிறுவனங்களை ஈர்க்கவில்லை. எனினும் முன்பை காட்டிலும் உற்பத்தியினை ஈர்க்க முயற்சியினை எடுத்து வருகின்றது. குறிப்பாக அரசின் பிஎல்ஐ திட்டம் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையை அளிக்கும். இதன் மூலம் மின்சார பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
பாக்ஸ்கான் உற்பத்தி சரிவு
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது திறனை 95%ல் இருந்து, 75% ஆக குறைத்துள்ளது. ஆக இந்த 20% இடைவெளியானது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கலாம். எனினும் இது வெறும் ஆரம்பம் மட்டுமே.
சீனா, தாய்வானுக்கு வெளியே உற்பத்தியினை அதிகரிக்க இந்தியா சரியான ஒரு இடமாக பார்க்கப்படலாம். இது நல்ல வாய்ப்பாக இருக்கலாம். இதே செலவு வாரியாக பார்க்கும்போதும் இந்தியா சிறந்த ஒரு இடமாக பார்க்கப்படுகிறது. ஆக இந்தியா விரிவாக்கம் செய்ய ஒரு வாய்ப்பாக அமையலாம்.
சீனாவின் செமிகண்டக்டர் வளர்ச்சி
சீனாவின் செமிகண்டர் துறையானது கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை கண்டுள்ளது. 5 வருடங்களுக்கு முன்பு சீனாவின் செமிகண்டக்டர் வளர்ச்சி 13 பில்லியன் டாலர் மட்டுமே. இது உலகளாவிய சந்தையில் 3.8% மட்டுமே ஆகும். எனினும் 2020ல் செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சி 30.6% அதிகரித்து, 39.8 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என SIA ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாகவே தைவானை விஞ்சியது.
எது எப்படியோ சீனாவின் தாக்கம் என்பது இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பாக அமையலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications