சர்வதேச சந்தையில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில், ஐடி துறையில் மிகப்பெரிய டெக் ஜாம்பவான்கள் கூட பணி நீக்கம் செய்து வருகின்றது. இதன் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றது. ஆனால் இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இந்திய ஐடி நிறுவனம் ஒன்று பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
ஹெச் சி எல் டெக் நிறுவனம் ரோமானியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து விரிவாக்கம்
இந்த நிறுவனம் தொடர்ந்து ரோமானியாவில் அதன் செயல்பாட்டினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், புதிய புதிய பட்டதாரிகளை பணியமர்த்தி வருகின்றது. இதற்காக முன்னணி ரோமானியன் பல்கலைக் கழங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் தேவையான பட்டதாரிகளை பணியமர்த்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரோமானியாவில் இருப்பு
கடந்த 5 ஆண்டுகளாக ரோமானியாவில் தனது செயல்பாட்டினை கொண்டுள்ள ஹெச் சி எல் டெக், நாடு முழுவதும் உள்ள 1000 ஊழியர்களுக்கு மேலாக கொண்டுள்ளது. இங்கிருந்து பல சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை செய்து வருகின்றது. அதிகரித்து வரும் தேவைகளுக்கு மத்தியில் உள்நாட்டு திறமைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பயிற்சியுடன் வேலையா?
ரோமானியாவின் இந்த அலுவலகத்தில் மாணவர்களுக்கு இண்டர்ஷிப் பயிற்சி மற்றும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி என அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் பல பதவிகளுக்கு பிரெஷ்ஷர்களை பணியமர்த்தி வருகின்றது.
இன்றும் ரோமானியாவில் ஹெச்.சி.எல் டெக் நிறுவனம் முக்கிய செயல்பாட்டினை கொண்ட ஒரு நிறுவனமாக உள்ளது.
பணி நீக்கத்தின் மத்தியில் பணியமர்த்தல்
தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் நிறுவனம் தொடர்ந்து பணியமர்த்தலிலும் கவனம் செலுத்தி வருகின்றது. ஹெச்சிஎல்லின் இந்த நடவடிக்கையானது கூகுள், அமேசான், மெட்டா போன்ற ஜாம்பவான்கள் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், இந்த பணியமர்த்தல் குறித்தான அறிவிப்பானது வந்துள்ளது. இது மேற்கொண்டு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பணியமர்த்தல் அதிகரிக்க வேண்டும்
இந்த நெருக்கடியான நிலையின் மத்தியிலும் ஹெச் சி எல்லின் இந்த அறிப்பானது சற்றே ஆறுதல் அளித்தாலும், இந்த பணியமர்த்தல் ஆனது இந்தியாவில் இல்லை என்பது கவலையளிக்கும் ஒன்றாகவே உள்ளது. எனினும் வரவிருக்கும் காலாண்டுகளில் இந்தியாவில் பணியமர்த்தல் அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.


Click it and Unblock the Notifications