அமெரிக்காவின் பிரபல டெக் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா மற்றும் அமேசான், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இந்த நிலை இனியும் தொடரலாம் என்ற அச்சமே ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பலர் ஹெச்1 பி விசா மூலம் பணியாற்றிவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விசா மூலம் பணியாற்றி வந்தவர்களுக்கு பணி நீக்கத்தோடு சேர்ந்து, 60 நாட்களுக்குள் வேலை தேட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டனர்.
60 நாள் தான் அவகாசம்
60 நாட்களில் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மீண்டும் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக புதிய வேலை எப்படியேனும் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் வெளிநாடு ஊழியர்கள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் இந்தியர்கள் என்பது மற்றொரு கவலை. ஆக பணி நீக்கம் அமெரிக்காவில் இருந்தாலும், அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்திய ஊழியர்களே.
கிரேஸ் பீரியடை அதிகரிக்கலாம்
ஆனால் இப்படி பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை கொடுக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 60 நாள் கிரேஸ் பீரியடை அதிகரிக்க பல்வேறு தரப்பினரும் அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த கோரிக்கையின் படி 60 நாளுக்கு பதிலாக, 180 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
180 நாள் அவகாசம் கொடுக்கணும்
ஆக இந்த 180 நாட்களில் வேலையிழந்தவர்கள் புதிய வேலையினை பெற முடியும் எனலாம். இது அவர்களுக்கு போதிய அவகாசத்தினையும் வழங்கும் எனலாம்.
ஹெச்1 பி விசா பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் முக்கிய நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்பு பதவிகளுக்கு வெளி நாட்டு ஊழியர்களை பணியமர்த்திக் கொள்ளலாம். இதற்காக வழங்கப்படும் விசா தான் ஹெ1 பி விசா ஆகும். இந்த விசா மூலம் அதிகளவிலான இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தான் அதிக பலன் பெறுகின்றனர்.
எளிதான விஷயமல்ல
அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், புதிய வேலைகளை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஆக பெரும்பாலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் உள்ளனர் எனலாம். ஆக அமெரிக்காவின் இந்த கால அவகாசம் என்பது அதிகரிக்கப்படும் பட்சத்தில் இதனால் அதிகம் பலனடையப்போவதும் இந்தியர்களே எனலாம்.
இந்திய சீனர்களுக்கு பலன்
ஆக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இப்பிரச்சனைகளை தாண்டியும், அதிக நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை தேடிக் கொள்ள முடியும். இது குறித்து அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் விரைவில் அறிவிக்கலாம் என தெரிகிறது. இதனால் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியா சீனாவில் இருந்து பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவான நடைமுறை
உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவில், சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் கூடிய நிலையில், அனைத்து திறன் கொண்ட தொழிலாளர்களுக்கும் பெரும் தேவை உள்ளது. இதன் மூலம் நம்பமுடியாத சேமிப்புடன் அதிக சம்பளமும் கிடைக்கிறது. ஆக வேலை விசாக்கள், ஸ்பான்சர் செய்யும் முதலாளிக்கு வேலை செய்யும் நோக்கத்திற்காக அமெரிக்காவிற்குள் ஊழியர்களை அனுமதிக்கின்றன.
என்ன செய்யப்போகிறது?
எனினும் விசா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும், அதன் பிறகு விண்ணப்பதாரர் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். விண்ணப்பதாரர்களின் சாத்தியமான பணியமர்த்துபவர் அவர்கள் சார்பாக USCIS இல் ஒரு மனுவைச் சமர்ப்பித்தால், பணி அனுமதி விசாக்கள் அவர்களுக்கு வழங்கப்படலாம். இதுவே பொதுவானதொரு நடைமுறையாகும். ஆக இப்படி ஒரு நடைமுறையில் தளர்வு இருக்குமா? அமெரிக்கா என்ன செய்ய போகிறது? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications