நியூயார்க்: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் நீடித்து வரக்கூடிய சூழலில் டிரம்ப் புதிதாக ஹெச்1பி விசாவிற்கு அதிக கட்டணத்தை விதித்து இந்தியா ஐடி ஊழியர்களுக்கு மற்றொரு பிரச்சனையை உண்டாக்கியுள்ளார். இப்படி இந்தியா அமெரிக்கா இடையே பல்வேறு பிரச்சினைகள் நிகழ்ந்து வரக்கூடிய சூழலில் இரண்டு மத்திய அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா பொது குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். நியூயார்க் சென்றுள்ள அவர் தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோவை சந்தித்தார். அப்போது இருநாட்டு பிரச்சனைகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஜெய்சங்கர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதனை அடுத்து அமெரிக்க அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் இந்தியாவின் நட்பு அமெரிக்காவிற்கு மிக முக்கியம் என்பதை ரூபியோ ஜெயசங்கரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து ஆகியவற்றில் இந்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை அவர் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இரு அமைச்சர்களும் ஜூலை மாதம் வாஷிங்டனில் நடந்த குவாட் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சந்தித்து பேசினர். அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்த பிறகு இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக் கொள்வது இதுவே முதல் முறையாகும் .ஜெய்சங்கர் வரும் 27ஆம் தேதி ஐநா பொது குழு கூட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு பேச இருக்கிறார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையை தொடர்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். இதன் ஒரு பகுதியில் அமெரிக்க தரப்பில் வர்த்தக பேச்சுவார்த்தை குழுவினரை அவர் சந்தித்து பேசினார். பியூஸ் கோயல் வர்த்தக பேச்சுவார்த்தைக்காக இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக அமெரிக்கா சென்றிருக்கிறார்.

வர்த்தக பேச்சு வார்த்தையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இரு நாடுகளும் பயன்பெறக்கூடிய ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதே பியூஸ் கோயலின் இந்த பயணத்தின் நோக்கம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டிருந்த சூழலில் இரண்டு மத்திய அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் இந்தியா சீனாவிடம் நெருக்கம் காட்டியது. இதனை அடுத்து தான் அமெரிக்கா மீண்டும் இந்தியாவுடன் நெருங்கி வர தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் , இந்திய பிரதமர் மோடியை கடந்த வாரம் தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications