டெல்லி: அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி அமெரிக்கா அரசாங்கம் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை செயல்படுத்தி இருக்கிறது.
வர்த்தக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த போதிலும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இப்படி வரிவிதிப்பு நடவடிக்கை எடுத்திருப்பது மத்திய அரசுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நான்கு முறை பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட முயற்சி செய்வதற்காகவும், ஆனால் பிரதமர் மோடி அவரிடம் பேச மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜெர்மனியில் வெளியாகி வரும் Frankfurter Allgemeine என்ற ஒரு செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது. இது எக்ஸ் பக்கத்திலும் பலரால் பகிரப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் தொடர்ச்சியாக நான்கு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அவருடைய அழைப்பை பிரதமர் மோடி ஏற்கவில்லை என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது .
அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையால் பிரதமர் மோடி அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் அவரது அழைப்பை ஏற்று அவர் பேசவில்லை என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு வலுப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிரம்பின் வர்த்தக கொள்கைகளும் வரி விதிப்பு நடவடிக்கைகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலில் இந்திய பொருட்களுக்கு 25% வரியை விதித்த டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி கூடுதலாக 25% வரியை வரி என மொத்தம் 50 சதவீத வரியை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார். இது இந்தியாவை சேர்ந்த ஜவுளி , நவரத்தினங்கள் மற்றும் நகைகள் என ஏற்றுமதி சார்ந்த பல்வேறு துறைகளையும் கடுமையாக பாதிக்க இருக்கிறது.
இந்த சூழலில் தான் மோடி அமெரிக்க அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் டிரம்ப் நான்கு முறை தொடர்பு கொண்டும் மோடி பேச மறுத்துவிட்டார் என்றும் ஜெர்மனியை செய்த நாளிதழ் தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானுடன் டிரம்ப் நெருக்கம் காட்டுவது , இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக கூறியது என டிரம்பின் பல நடவடிக்கைகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து எரிச்சலை உண்டாக்கி இருக்கின்றன.
இறுதியாக கடந்த ஜூன் 17ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது, அது 35 நிமிடங்கள் நீடித்தது என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?



Click it and Unblock the Notifications