இந்தியாவில் டிசிஎஸ் நிறுவனம் 12,000க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து மற்ற நிறுவனங்களும் இதையே பின்பற்றி ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் இருக்கும் என ஐடி துறையில் ஒரு அச்சம் நிலவி வருகிறது.
இன்போசிஸ் வெளியிட்ட நல்ல செய்தி: இந்த சூழலில் இன்போசிஸ் நிறுவனம் இந்த ஆண்டு நாங்கள் யாரையும் பணிநீக்கம் செய்யப் போவதில்லை புதிதாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரப் போகிறோம் என்ற நல்ல தகவலை வெளியிட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு ஐடி நிறுவனமும் ஐடி துறையினருக்கு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது.

டிசிஎஸ் பணிநீக்கம்: ஐடி துறை மந்தமாக இருக்கிறது, டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஐடிக்கான தேவை குறைந்தது மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்தது ஆகியவை காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை கையில் எடுத்திருக்கின்றன. இந்தியாவில் ஐடி துறையில் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கக்கூடிய டிசிஎஸ் தங்கள் ஊழியர்களின் 2% பேரை வேலையில் இருந்து நீக்குவதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
கேப் ஜெமினி நற்செய்தி: இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான கேப் ஜெமினி (Cap Gemini)இந்த ஆண்டு புதிதாக 40 ,000இல் இருந்து 45,000 ஊழியர்களை பணிக்கு எடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இவர்களில் 40% பேர் பணி அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள் என கேப் ஜெமினி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்வின் யார்டி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் .

45,000 பேருக்கு வேலைவாய்ப்பு: தற்போதைக்கு இந்தியாவில் கேப் ஜெமினி நிறுவனத்தில் 1, 75,000 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு ஐடி நிறுவனமாகவும் இது இயங்கி வருகிறது. தங்களுடைய வாடிக்கையாளர்கள் செலவுகளை குறைக்க வேண்டும், செயல் திறனை மேம்படுத்த வேண்டும் என விரும்பி இந்திய ஐடி நிறுவனங்களை நோக்கி தான் படையெடுத்து வருகிறார்கள் என கூறும் அஸ்வின் யார்டி, இந்த டிமாண்ட் அதிகரிப்பதன் காரணமாக தங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் பாசிட்டிவாக இருப்பதாகவும் எனவே இந்த ஆண்டு தங்களுடைய நிறுவனம் புதிதாக 40 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த போகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஏஐ பயிற்சி: இதற்காக கேப் ஜெமினி நிறுவனம் இந்தியாவில் 50 கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக வேலைவாய்ப்பு தர ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் . மேலும் தங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு தேர்ந்தெடுக்கும் அனைவருக்கும் தொடக்கத்திலேயே ஏஐ தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு விடும் என்றும் ஏஐ காலத்திற்கு ஏற்ற வகையில் எங்களுடைய ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட கேப் ஜெமினி நிறுவனம் இந்தியாவில் படிப்படியாக தன்னுடைய ஐடி தொழிலை விரிவாக்கம் செய்து வருகிறது., சென்னை, பெங்களூரு நகரங்களில் இதன் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications