டெல்லி: கடந்த 2020ஆம் ஆண்டு கால்வன் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இத மோதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை கொண்டு வந்தது. ஆனால் அண்மை காலமாக இந்தியா மீதான சீனாவின் பார்வை மாறி வருகிறது.
இந்தியாவில் சீன அமைச்சர்: கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார். 2 நாட்கள் பயணமாக டெல்லி வந்திருக்கும் வாங் யீ நேற்றைய தினம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரை சந்தித்தார். இருநாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அப்போது நடைபெற்றது.

முக்கியத்துவம் வாய்ந்த பயணம்: இந்த சந்திப்பின் போது பேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்படுவது குறித்தும் , இருநாட்டு உறவையும் மேம்படுத்துவது குறித்தும் வாங் யீ-இன் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினைகள் குறித்தும் பேசப்படுவதாக அப்போது அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் பிரச்சினைகளாக நீடிக்க கூடாது என ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

ஜெய்சங்கர் சந்திப்பு: உலகின் இரண்டு பெரிய நாடுகளின் பிரதிநிதிகள் பேசும் போது நிச்சயமாக சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பேசப்படும் என ஜெய்சங்கர் தெரிவித்தார். அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படுகிறது என்பதையே அவர் மறைமுகமாக கூறியுள்ளார். முன்னதாக இந்தியா புறப்படும் முன் பேசிய வாங் யீ, இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக பார்க்க கூடாது என்றும் நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எல்லை பிரச்சினை: ஜெய்சங்கர் உடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும் அவர் கலந்துரையாடினார். முன்னதாக டிசம்பர் மாதத்தில் அஜித் தோவல் சீனாவுக்கு பயணம் செய்திருந்தார்.
மாலை பிரதமருடன் சந்திப்பு: சீன அமைச்சர் வாங் யீ தன்னுடைய பயணத்தின் முக்கிய பகுதியாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது. இந்த மாத இறுதியில் ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சீனாவுக்கு செல்ல இருக்கிறார். அப்போது பிரதமர் சீன அதிபரை சந்தித்து பேச வாய்ப்புள்ளது. அதற்கான ஒரு முன்னோட்டமாக தான் சீன அமைச்சரின் இந்திய வருகை அமைந்திருக்கிறது.
அமெரிக்காவின் மிரட்டல்: அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைகள், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்ற மிரட்டல் ஆகியவற்றுக்கு மத்தியில் வாங் யீ பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நடப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக சீனாவும் இந்தியாவும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தி இருக்கிறது.இந்தியாவும் சீன நாட்டவர்களுக்கு சுற்றுலா விசா வழங்க அனுமதி தந்திருக்கிறது. அமெரிக்காவின் நெருக்கடி இந்தியா மற்றும் சீனா இடையே நட்புறவை கொண்டு வர உதவி இருக்கிறது.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications