தமிழ்நாடு தொழில் துறை ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கி வருகிறது. இது ஒட்டு மொத்த இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் என்ற இடத்திற்கு தமிழ்நாட்டை கொண்டு சேர்த்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக வளர்ச்சி கண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்திருக்கிறது . 16 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தோடு தமிழ்நாடு அதிகமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது என ரிசர்வ் வங்கியே தகவல் வெளியிட்டு இருக்கிறது . ரிசர்வ் வங்கி 2024-25 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கான ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் தொடர்பான ஒரு தரவினை வெளியிட்டு இருக்கிறது .

இதன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாட்டிலேயே 16 சதவீத வளர்ச்சியை பெற்று முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது . ஆந்திரா ,தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களும் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன. பாரம்பரியமாகவே வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்னிந்திய மாநிலங்கள் சிறந்த வேலை வாய்ப்பு ,தரமான வாழ்க்கை , கல்வி உள்ளிட்டவற்றில் எல்லாம் சிறப்பாக தான் செயல்படுகின்றன.
தற்போது தென்னிந்திய மாநிலங்களிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து இருக்கிறது. குறிப்பாக வாழ்க்கை தரம், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் சுற்றுலா பயணிகள் வருகை உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு தென்னிந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக உருவாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த தரவுகள் திமுகவுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் வந்திருக்கின்றன.

2024 - 25 ஆம் ஆண்டினை பொருத்தவரை தென்னிந்தியாவிலேயே அதிக அளவு ஏற்றுமதி செய்த மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது . தமிழ்நாட்டில் 52.07 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் கர்நாடகா 30 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது . தொழிற்சாலைகள் பொருத்தவரை தென்னிந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 40, 121 தொழிற்சாலைகள் இயங்குகின்றன . இந்த பட்டியலில் ஆந்திரா 16,000 தொழிற்சாலைகளோடு இரண்டாவது இடத்திலும் 14, 984 தொழிற்சாலைகளோடு கர்நாடகா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது .
அதேபோல வேலை செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை என பார்க்கும்போது தமிழ்நாடு தான் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 24,75,000 ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது கர்நாடகா கர்நாடகாவில் 9, 68,92 ஊழியர்கள் இருக்கின்றனர். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் தெலுங்கானா இருக்கிறது.
சுற்றுலா பயணிகள் வருகை என பார்க்கும் போது தமிழ்நாடு தான் இந்த விஷயத்தில் முதலிடத்தில் இருக்கிறது உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 2024 ஆம் ஆண்டில் 37 மில்லியன் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள் அதே ஆண்டில் 11.6 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார்கள். வேறு எந்த தென்னிந்திய மாநிலமும் தமிழ்நாட்டுக்கு அருகில் கூட வர முடியவில்லை .
தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி சமூக வலைத்தளங்களிலும் பெரிய விவாதத்தை எழுப்பி இருக்கிறது. மொபைல் போன் உற்பத்திக்கான மத்திய அரசின் உற்பத்தி இணைக்கப்பட்ட திட்டம், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களுக்கான உதவி திட்டம் என இரண்டு திட்டங்ஜளிலும் ஏராளமான முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வந்துள்ளன என பிரச்சன்னா விஸ்வநாதன் என்பவர் எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications