இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் சங்கமான All India Mobile Retailers Association (AMIRA), சீன நிறுவனங்களான iQoo, Poco மற்றும் OnePlus ஆகிய பிராண்டுகள் இந்தியாவில் போட்டித்தன்மைக்கு எதிரான நடவடிக்கைகளைச் செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள ரீடைல் வணிகங்களுக்கும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இந்த நிறுவனங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே சீன பிராண்டுகளும், சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு நிலவும் வேளையில், இந்த கோரிக்கை பெரும் பிரச்சனையாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. AMIRA அமைப்பு iQoo, Poco மற்றும் OnePlus ஆகிய பிராண்டுகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன..?

பிரத்தியேக இ-காமர்ஸ் கூட்டணி: இந்த சீன நிறுவனங்கள், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுடன் பிரத்தியேக கூட்டணி அமைத்துள்ளதாக ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதனால், சில்லறைக் கடைகளில் இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் கிடைப்பது குறைவாக உள்ளதாகவும், இது உள்ளூர் வணிகங்களைப் பாதிப்பதாகவும் கூறுகின்றனர்.
அங்கீகரிக்கப்படாத தயாரிப்பு மாற்றம்: இந்த சீன நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இ-காமர்ஸ் தளத்திலிருந்து சில்லறைக் கடைகளுக்கு அங்கீகரிக்கப்படாத வழியில் மாற்றுவதாக AMIRA குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இது விநியோக சேனல்களை பாதிப்பதோடு, அரசுக்கு வரி வருவாய் இழப்பையும் ஏற்படுத்துகிறது.
அரசுக்கு வருவாய் இழப்பு: இந்த போட்டிதன்மைக்கு எதிரான நடவடிக்கைகளால் அரசுக்கு வரி மற்றும் பிற பொருளாதார நன்மைகள் மூலம் குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று தொலைப்பேசி விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
அரசு தலையீடு கோரிக்கை: இந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக, AMIRA இந்திய அரசை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இதோடு iQoo, Poco மற்றும் OnePlus ஆகிய பிராண்டுகள் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
இதற்காக AMIRA அமைப்பு வணிகம் மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தலையிட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள்போட்டிதன்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு AMIRA-ன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், இந்திய தொலைப்பேசி சந்தைக்குக் குறிப்பிடத்தக்கப் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் சந்தைக்கு வருவது குறையலாம், இது நுகர்வோருக்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications