இந்திய அரசியலின் முக்கிய புள்ளியாக உயர்ந்திருக்கும் பிஜேபி கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா 250-க்கும் மேற்பட்ட பங்குகளை முதலீடு செய்து கைப்பற்றியுள்ளார். 250 நிறுவனங்களின் பங்குகளைக் கையாளுவது என்பது சாதாரண விஷயமில்லை.
இதை வெளியில் இருந்து பார்ப்பதற்குச் சிக்கலானதாகத் தோன்றினாலும், அமித் ஷா நன்கு யோசித்து முறையாகத் திட்டமிட்டு தனது போர்போலியோவை மேம்படுத்தியுள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் இருந்து இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் உள்துறை அமைச்சரும், பாஜகவின் உயர்மட்ட தலைவருமான அமித் ஷா, சமர்ப்பித்துள்ள நாமினேஷன் விண்ணப்பத்துடன் தனது சொத்து மதிப்பு விபரங்களைப் பட்டியலிட்டு உள்ளார்.
அமித் ஷா 180 நிறுவனங்களின் பங்குகளிலும், அவரது மனைவி சோனல் சுமார் 80 நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளனர். இதில் பட்டியலிடப்படாத நிறுவனங்களையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமித் ஷாவின் பங்குச் சந்தை முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.17.46 கோடியாகவும், அவரது மனைவியின் மதிப்பு ரூ.20 கோடியாக உள்ளது என நாமினேஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமித் ஷாவின் தனிப்பட்ட ஈக்விட்டி போர்ட்ஃபோலியோவில் டாப் 5 முதலீட்டுப் பங்குகள் - HUL, MRF, Procter & Gamble Hygiene And Health Care மற்றும் ABB இந்தியா. இதைத் தாண்டி ஐடிசி, விஐபி இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், கிரைண்ட்வெல் நார்டன், கம்மின்ஸ் இந்தியா மற்றும் கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் ஆகியவை பிற சிறந்த பங்குகளும் அடங்கும். அவரது பட்டியலிடப்படாத போர்ட்ஃபோலியோ-வின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
சுமார் ரூ.17.4 கோடி மதிப்புள்ள அவரது மொத்த போர்ட்ஃபோலியோவில் துறை சார்ந்த தேர்வுகளுக்கு வரும்போது வங்கிகள் மற்றும் FMCG பங்குகள் அமித் ஷா-வுக்கு மிகவும் பிடித்தமானவையாக உள்ளது.
அமித் ஷா மற்றும் சோனல் தம்பதியனரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.65.67 கோடியாகும். அமித்ஷா-விடம் ரொக்கம், வங்கி சேமிப்பு, டெபாசிட், தங்கம், வெள்ளி, பரம்பரை சொத்து உட்பட அசையும் சொத்துகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.20.23 கோடி.
சோனாலின் அசையும் சொத்துக்கள் ரொக்கம், வங்கி சேமிப்பு, பங்கு முதலீடுகள் மற்றும் டெபாசிட்கள் உட்பட சுமார் ரூ.22.5 கோடி மதிப்புடையது, மேலும் ரூ.1.10 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இவரிடம் உள்ளது.


Click it and Unblock the Notifications