நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் உலகிலேயே வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதன்மை நாடாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா வெள்ளிக்கிழமை FICCI வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைய போராடி வரும் நிலையில் ஒமிக்ரான் பெரும் தடையாக மாறியுள்ளது, இந்தச் சூழ்நிலையில் அமித் ஷா உலகிலேயே மேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் எனப் பேசியுள்ளார்.
FICCI அமைப்பு
இன்று FICCI அமைப்பின் 94வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை எட்டி வருகிறது, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, 2021-22 நிதியாண்டு முடிவதற்குள் இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இருக்கும் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார் அமித் ஷா.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரத்தைக் கணிக்கும் 22 காரணிகளில் 19 காரணிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது, இது இந்தியா மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளதைக் காட்டுகிறது எனவும் உள்துறை அமைச்சரான அமித் ஷா இக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
உற்பத்தி மற்றும் சேவை துறை
மேலும் இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை குறியீடு கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டைத் தொட்டு உள்ளது. இந்த வளர்ச்சி மத்திய அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களும் தளர்வுகளும் முக்கியக் காரணமாக உள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கமும் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4-6 சதவீத வளர்ச்சி அளவீட்டில் தான் உள்ளது எனவும் அமித் ஷா பேசியுள்ளார்.
MSME துறை
இதோடு இக்கூட்டத்தில் அமித் ஷா MSME துறையின் முக்கியத்துவத்தையும் பேசிய அவர், நாட்டின் வேலைவாய்ப்பின்மையைப் போக்க MSME துறையை ஊக்குவிப்பதோடு வலிமை சேர்க்கவும் உள்ளதாகப் பேசினார். இதற்கிடையில் R&D துறையில் அதிகப்படியான முதலீட்டைச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
FICCI அமைப்பு
FICCI அமைப்பு அடுத்த 25 வருடத்திற்கு வளர்ச்சி வாய்ப்புகளை அதிகம் கொண்டு இருக்கும் துறைகளைக் கண்டறிந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுக்க வேண்டும், மத்திய அரசின் ஆத்ம நிருபர் பாரத் போன்ற திட்டத்தில் FICCI அமைப்பு அரசு இணைந்து பணியாற்ற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறினார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications