ரியல் எஸ்டேட்டில் புகுந்து விளையாடும் பச்சன் குடும்பம்..!

மும்பை: பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் அடுத்தடுத்து ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 100 கோடி ரூபாயை இவர்கள் ரியல் எஸ்டேட்டில் மட்டும் முதலீடு செய்துள்ளனர்.

தந்தையும் மகனும் மும்பையின் முலுந்த் பகுதியில் அண்மையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொத்துக்களை வாங்கியுள்ளனர். ஓபராய் ரியால்ட்டி ப்ராஜெக்ட் சார்பில் கட்டப்பட்டுள்ள மூன்று படுக்கை அறை கொண்ட மற்றும் நான்கு படுக்கை அறை கொண்ட ஆடம்பர குடியிருப்புகளை இவர்கள் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளாக இவை இருக்கின்றன.

ரியல் எஸ்டேட்டில் புகுந்து விளையாடும் பச்சன் குடும்பம்..!

இவற்றின் மொத்த கார்பெட் ஏரியா 10216 சதுர அடி ஆகும். மொத்தமாக பத்து குடியிருப்புகளை பச்சன் குடும்பத்தினரே கையகப்படுத்தி உள்ளார்களாம். இதில் எட்டு குடியிருப்புகள் 1049 சதுர அடி பரப்பளவு கொண்டவை, மீதம் இருக்கும் இரண்டும் 912 சதுர அடி பரப்பளவு கொண்டவை .

மொத்தமாக இதில் அபிஷேக் பச்சன் ஆறு வீடுகளை 15 கோடி ரூபாய் செலுத்தி வாங்கியுள்ளார். மீதமுள்ள நான்கு குடியிருப்புகளை அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார்.

மொத்தமாக இந்த குடியிருப்புகளை பதிவு செய்ய ஸ்டாம்ப் டூட்டியாக மட்டும் 1.50 கோடி ரூபாயை கட்டணமாக செலுத்தியுள்ளனர். மும்பையில் ஆடம்பர குடியிருப்புகளுக்கு பெயர் போன பகுதியாக முலுந்த் பகுதி இருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதலே பல்வேறு பிரபலங்களும் இந்த பகுதியில் முதலீட்டினை மேற்கொண்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் பச்சன் குடும்பத்தினர் பல்வேறு ரியல் எஸ்டேட் பிரிவில் மட்டும் 100 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.

அமிதாப் பச்சனை பொறுத்தவரை அண்மையில் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார்.
82 வயதாக கூடிய அமிதாபச்சன் தன்னுடைய முதலீட்டின் பெரும் பகுதியை ரியல் எஸ்டேட் பிரிவிலேயே வைத்திருக்கிறார்.

மும்பையின் ஜூஹூ பகுதியில் உள்ள இவரது குடியிருப்பின் மதிப்பு மட்டும் 40 கோடி ரூபாய் ஆகும். அதே போல ஜானக் பகுதியில் உள்ள மற்றொரு குடியிருப்பு 50 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. தன்னுடைய மகனுடன் இணைந்து இவர் பல இடங்களில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்திருக்கிறார். மும்பை மட்டுமில்லாமல் புனேவிலும் இவர் சொந்தமாக விவசாய நிலங்களை வைத்திருக்கிறார்.

பிரான்சில் 2.87 கோடி ரூபாய் மதிப்பில் இவருக்கு சொந்தமாக ஒரு வில்லா இருக்கிறது. எனவே அமிதாப்பச்சன் ரியல் எஸ்டேட் பிரிவில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஆடம்பர கார்களை வாங்குவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்.

மொத்தமாக இவரிடம் இருக்கும் கார்களின் மதிப்பு 20 கோடி ரூபாய் ஆகும். இதில் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் ஆகியவை அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+