முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் FMCG பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை தாண்டி அதிகளவிலான வர்த்தகத்தை பெற வேண்டும் என்பதற்காக மார்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.
இதற்காக கடந்த சில மாதங்களில் ரிலையன்ஸ் கன்சியூமர் பிராடக்ட்ஸ் லிமிடெட் மூன்று முக்கிய பிராண்ட் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் கேம்பா பிராண்டுக்கு டோலிவுட் நடிகரான ராம் சரணை ஒப்பந்தம் செய்தது, இந்த ஒப்பந்தம் மூலம் IPL T20 சீசனில் விளம்பரமாக வெளியானது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகரும் ரேசருமான அஜித் குமாரின் மோட்டார்ஸ்போர்ட் அணியுடன் விளம்பர கூட்டணியை கேம்பா பிராண்டுக்காக செய்தது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர். இந்திய கார்பனேடெட் குளிர்பான சந்தையில் கேம்பா அறிமுகமாகி 3 வருடங்கள் ஆன நிலையில், இந்த சந்தை பங்கு 2024ல் 2 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில், 2025ல் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை அடுத்த 3 வருடத்தில் 25 சதவீதமாக உயர்த்த அடுத்தடுத்து முக்கிய விளம்பர ஒப்பந்தங்களை செய்து வருகிறது.
இப்போது புதிதாக அமிதாப் பச்சன் உடன் முக்கியமான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் கன்சியூமர் பிராடக்ட்ஸ் லிமிடெட் செய்துள்ளது. ரிலையன்ஸ் கன்சியூமர் நிறுவனம் சமீபத்தில் பேகேஜ் தண்ணீர் பிராண்டான Campa Sure அறிமுகம் செய்தது. சந்தையில் பாட்டில் தண்ணீர் வர்த்தகத்தில் பல பிராண்டுகள் இருக்கும் வேளையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
Campa Sure பிராண்டின் வர்த்தகத்தை வேகமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரும் நோக்கில் அமிதாப் பச்சனை பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்துள்ளது ரிலையன்ஸ். இப்படி ரிலையன்ஸ்-ன் FMCG பிரிவான RCPL, கடந்த 12 மாதத்தில் மூன்று மிகப்பெரிய பிராண்ட் ஒப்பந்தம் செய்துள்ளது.
அமிதாப் பச்சன் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் வேளையில், கேம்பா ஸ்யூர்-ன் குறைந்த விலை வர்த்தக மாடலை பயன்படுத்தி சந்தையில் வலுவான இடத்தைப் பிடிக்க திட்டமிட்டு உள்ளது அம்பானி.

தற்போதைக்கு ரிலையன்ஸ் ஒரு ஆண்டு மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளது. கேம்பா ஸ்யூர் தண்ணீர் பாட்டில்-க்கு பிஸ்லெரி, கோகோ கோலாவின் கின்லி, பெப்சிகோவின் அக்வாஃபினா ஆகியவற்றைவிட 20-30 சதவீதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குறைந்த விலை உத்தி ரிலையன்ஸ்-க்கு காலம் காலமாக வெற்றியை கொடுத்து வருகிறது. கேம்பா ஸ்யூர் தண்ணீர் பாட்டில் விலை 250ml பாட்டில் ரூ.5, 500ml ரூ.10, 1 லிட்டர் ரூ.15, 2 லிட்டர் ரூ.25. உதாரணமாக 1L பிஸ்லெரி ரூ.18, 2லிட்டர் ரூ.27 விலையில் விற்கப்படுகிறது.
பிஸ்லெரி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை பிராண்ட் அம்பாசிடராகக் கொண்டுள்ளது. இந்தியாவின் பேக்ட் தண்ணீர் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ரிலையன்ஸ் குறைந்த விலை மற்றும் பிரபல நட்சத்திரங்களின் ஆதரவுடன் வலுவான போட்டியை ஏற்படுத்துகிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications