பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் சினிமா-வை காட்டிலும் அதிகப்படியான பணத்தை தனது பறந்து விரிந்த முதலீடுகளால் பெற்றுள்ளார். அமிதாப் பச்சன் சொத்து மதிப்பில் பெரும் பகுதி ரியல் எஸ்டேட் முதலீடுகள் என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் அமிதாப் பச்சன் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் காரணத்தால், அந்நகரின் ரியல் எஸ்டேட் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்த நிலையில் மும்பை சார்ந்த தி ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதா நிறுவனம் உருவாக்கியுள்ள தி சரயு 7 ஸ்டார் வளாகத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனையின் விலை ரூ.14.5 கோடி ஆகும்.
இந்த புதிய ரியல் எஸ்டேட் முதலீட்டின் குறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், என் இதயத்தில் தனி இடம் பிடித்துள்ள புனித நகரமான அயோத்தியில் தி ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதாவின் தி சரயு வளாகத்தில் வீட்டு மனை வாங்கியதை பெருமையாகக் கருதுகிறேன்.
புவியியல் எல்லைகளையெல்லாம் கடந்து அயோத்தியுடன் இருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு, கலாசாரப் பெருமை, காலம்கடந்த இறையுணர்வு ஆகியவற்றுடன் இணைவதில் மகிழ்கிறேன். இது அயோத்தியில் எனது இதயப்பூர்வமான பயணம். பாரம்பரியமும் நவீனத்துவமும் ஒருங்கே அமைந்துள்ளது.
உலகின் ஆன்மிகத் தலைநகரான அயோத்தியில் எனது வீட்டை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன். தி சரயு வளாகம் ஜனவரி 22 ஆம் தேதியன்று திறக்கப்படுகிறது. அதே தேதியில் பிரதமர் நரேந்திர மோடி புதிய ராமர் கோயிலைத் திறந்து வைக்கிறார்.
இதனிடையே 2023 ஆம் ஆண்டு வெளியான கண்பத் படத்தின் போது டைகர் ஷ்ராப், கிரித்தி சனோனுடன் அமிதாப் பச்சன் காணப்பட்டார்.
இப்போது அவர் கல்கி 2898 கிமு படத்தில் நடித்து வருகிறார். அதில் தீபிகா படுகோனும் நடித்துள்ளார். இருவரும் பிகு படத்தில் கடைசியாக இணைந்து நடித்தனர்.
புதிய ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தியில் நிலம் விலை இப்போது தாறுமாறாக ஏறிவிட்டது. இதனால் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு அயோத்தியில் நிலம் அல்லது வீடுகளை வாங்கி வருகின்றனர். ராமர் கோயில் கட்டுமான அறிவிப்புக்கு முன்னர் இருந்த விலையை விட நிலத்தின் விலை இப்போது நான்கைந்து மடங்கு அதிகரித்து விட்டது.
ஏராளமான ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் அதிக முதலீட்டில் இங்கு குடியிருப்பு வளாகங்கள், மெகா மால்கள், வணிக வளாகங்களைக் கட்டி வருகின்றனர். அயோத்தியின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநில அரசும் பல்வேறு அடிப்படைக் கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன் புனித சரயு நதியில் நீர்வழி மெட்ரோ திட்டத்தையும் தொடங்கவுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதியன்று நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவன்று பிரதமர் மோடி இந்தத் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக அயோத்தியின் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு புதிய மெருகுடன் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அயோத்தியை நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைப்பதற்காக புதிய விமான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனங்கள், சென்னை, தில்லி, ஹைதராபாத், பெங்களூரு, மும்பையில் இருந்து தினமும் விமானப் போக்குவரத்தைத் தொடங்கியுள்ளன.
அயோத்தியில் இருந்து துபாய்க்கும் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications