பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன் மும்பையின் மிகவும் பிரபலமான ஜூஹு பகுதியில் பிரதிக்ஷா என்ற பெயரில் உள்ள தங்களின் ஆடம்பர பங்களாவை மகள் ஸ்வேதா நந்தாவுக்குப் பரிசளித்துள்ளனர்.
அமிதாப் பச்சன் தான் ஒட்டுமொத்த பாலிவுட்-க்கும் சினிமா-வை தாண்டி எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியும் என ரூட் போட்டுக் கற்றுக்கொடுத்தார். பிராண்ட் அம்பாசிட்டர், பிராண்ட் என்டோர்ஸ்மென்ட் ஆகியவற்றின் வாயிலாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் எப்படி முதலீடு செய்து அதிகப் பணத்தைச் சம்பாதிக்க முடியும் என்பதைக் காட்டினார். இவரது முக்கியமான முதலீடுகளுக்கு உதாரணம் ஜஸ்ட் டயல்.

இதன் மூலம் அமிதாப் பச்சன் சினிமாவில் நடிக்காத காலத்திலும் அதிகப்படியாகச் சம்பாதித்தார். இவரின் சொத்து மதிப்பில் பெரும் பகுதி ரியல் எஸ்டேட் ஆக இருந்தாலும் ஸ்டார்ட்அப் முதலீடுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதேபோல் இந்திய செலிப்ரிட்டி உலகில் முதல் முறையாக NFT-யில் முதலீடு செய்தது அமிதாப் பச்சன் தான்.
இப்படிச் சினிமா-விலும் முதலீட்டு உலகிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன் உடன் சேர்ந்து மகள் ஸ்வேதா நந்தாவுக்கு ஜூஹு வீட்டின் உரிமையை மாற்றும் இரண்டு தான பத்திரங்களைப் பதிவு செய்துள்ளனர். பெற்றோர் பிள்ளைகளுக்கு அளிக்கும் சொத்துக்களைத் தான பத்திரம் மூலம் அளிக்கும் போது அதற்கு வரிச் சலுகை கிடைக்கும்.
இந்த 2 பரிமாற்ற பத்திரங்களில் இருக்கும் நிலத்தில் தான் அமிதாப் பச்சனின் பிரதிக்ஷா வீடு உள்ளது. இந்த வீடு மொத்தம் 16,840 சதுர அடி பரப்பளவில் உள்ளது, நிலம் மற்றும் பங்களாவுக்கான பத்திரங்கள் நவம்பர் 8ஆம் தேதி எழுதப்பட்டு மறுநாள் பதிவு செய்யப்பட்டன. இந்த வீட்டின் மதிப்பு 50.63 கோடி ரூபாய் எனப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய விதிமுறைகளின்படி, மும்பையில் மகள் அல்லது மகனுக்குத் தந்தை வழங்கும் வீட்டு வசதி சொத்துக்கு, வீட்டின் மதிப்பில் 1 சதவீத தொகையை மெட்ரோ வரியாகச் செலுத்த வேண்டும். இதோடு 200 ரூபாய் முத்திரைத்தாள் வரி விதிக்கப்படும். இதன் படி அமிதாப் பச்சன் இரு பத்திரங்களுக்கு அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ரூ.50.65 லட்சம் மதிப்பிலான முத்திரைத் தொகையைச் செலுத்தியுள்ளனர் என Zapkey தளத்தின் தரவுகள் கூறுகிறது.
அமிதாப் பச்சன் ஜூஹு பகுதியில் மட்டுமே ஜல்சா, பிரதிக்ஷா, ஜானக் என 3 ஆடம்பர வீடுகளை வைத்துள்ளார். சமீபத்தில் அமிதாப் மும்பை அந்தேரி பகுதியில் சுமார் 8400 சதுரடி கொண்ட வர்த்தக வளாகம் கட்டுவதற்காக இடத்தை 29 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications