பங்குச்சந்தை முதலீட்டில் அதிகப்படியான லாபம் பெறுவது என்பது ஒரு கலை, இதற்கு ஒரு திறமை மட்டும் அல்லாமல் சரியான நேரத்தில் முதலீடு செய்யவும், சரியான நேரத்தில் முதலீட்டை வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிய வேண்டும்.
இதை அவ்வளவு எளிதாக தெரிந்துக்கொள்ள முடியாது, கட்டாயம் அதிகப்படியான தரவுகளும், ஆய்வு முடிவுகளும் தேவை. இவை அனைத்தும் பெரும் முதலீட்டாளர்களுக்கும், பிரபல முதலீட்டாளர்களும் பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து தினமும் அப்டேட் செய்து வருகிறது. இதன் மூலம் பெரிய தொகையை முதலீடு செய்து பெரிய லாபத்தை பார்க்கிறார்கள்.
இதை அடிப்படையாக வைத்தே பிரபல முதலீட்டாளர்கள் என்ன செய்கிறார்கள், எதில் முதலீடு செய்கிறார்கள் என கண்காணிக்க பெரிய கூட்டமே உள்ளது என்றால் மிகையில்லை.
பாலிவுட் மெகாஸ்டார்
இந்த நிலையில் பாலிவுட்-ன் மெகாஸ்டார் ஆக இருக்கும் அபிதாப் பச்சன் பல வருடங்களாக பங்குச்சந்தையிலும், நிறுவனங்களில் நேரடியாகவும் முதலீடு செய்து வருகின்றார். அப்படி அமிதாப் பச்சன் முதலீடு செய்த ஒரு நிறுவனம் அவருக்கு சுமார் 5 மடங்கு லாபத்தை கொடுத்து அசத்தியுள்ளது. இந்த நிறுவனத்தை பற்றியும், அமிதாப் பச்சன் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பதை பற்றியும் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
அபிதாப் பச்சன்
பாலிவுட் மெகாஸ்டார் DP Wires என்னும் ஸ்மால் கேப் நிறுவனத்தில் சுமார் 3,32,800 பங்குகளை வாங்கி மொத்த பங்குகளில் சுமார் 2.45 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அபிதாப் பச்சன் DP Wires நிறுவனத்தில் 5 வருடத்திற்கு முன்பு இந்த என்எஸ்ஈ சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தார், இந்த முதலீடு 5 மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது.
DP Wires நிறுவனம்
அமிதாப் பச்சன் முதலீடு செய்த காலக்கட்டமான செப்டம்பர் 2018ல் DP Wires பங்கு மதிப்பு 72.5 ரூபாயாக இருந்தது, 5 வருடத்திற்கு பின்பு மார்ச் 3 ஆம் தேதி வர்த்தக முடிவில் DP Wires பங்குகள் 367 ரூபாயாக உள்ளது, இது கிட்டதட்ட 5 மடங்கு லாபமாகும்.
மொத்த சந்தை மதிப்பு
DP Wires நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 497.95 கோடி ரூபாய், செப்டம்பர் 20, 2022ல் DP Wires பங்குகள் அதன் 52 வார உயர்வான 502.80 ரூபாய் அளவீட்டை எட்டியது, இதேபோல் ஜூன் 20, 2022ல் 52 வார குறைவான விலை அளவான 264.15 ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது.
முக்கிய வர்த்தகம்
DP Wires நிறுவழம் ஸ்டீல் வயர், பிளாஸ்டிக் பைப், பிளாஸ்டிக் பிளிம் போன்ற பொருட்களை ஆயில் & கேஸ், பவர், என்விரான்மென்ட், சிவில், எனர்ஜி, ஆட்டோமொபைல், இன்பரா போன்ற பல துறைக்கு தயாரித்து இந்தியா முழுவதும் விநியோகம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
பங்கு இருப்பு, லாபம், வருமானம்
DP Wires நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் மட்டுமே 70.40 சதவீத பங்குகளை வைத்துள்ளனர், ரீடைல் முதலீட்டாளர்கள் 8.88 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். 2022 ஆம் நிதியாண்டில் DP Wires நிறுவனத்தின் விற்பனை 25.70 சதவீதம் அதிகரித்து 613.24 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இதேபோல் லாபம் 29.05 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications