இந்திய திரையுலகை கலக்க வரும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், நேற்று இப்படத்தில் நடிக்கும் பெரும் நடிகர் பட்டாளத்தில் மிகவும் முக்கியமானவர்களின் ஒருவரான அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை ரிவீல் செய்துள்ளனர்.
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றான துரோணரின் மகன் அஸ்வத்தாமனை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தின் வீடியோ பலரையும் கவர்ந்து இப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பெரும் பணக்கார மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் என கடல் பார்வை கொண்ட சொத்துக்களை வாங்கி குவிக்கும் மும்பைக்கு அருகிலுள்ள முக்கிய பகுதியான அலிபாக் நகரில் ஒரு ஆடம்பர வில்லா வீட்டை கட்டுவதற்கு நிலத்தை வாங்கியுள்ளார்
அமிதாப் பச்சன் இப்பகுதியில் சுமார் கால் ஏக்கர் நிலத்தை தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா (HoABL) நிறுவனத்திடம் இருந்து சுமார் 10 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அமிதாப் பச்சன் சினிமா நடிகர் என்பதைக் காட்டிலும் வெற்றிகரமான ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும்.
அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு மும்பையில் ஜல்சா, பிரதீக்ஷா மற்றும் ஜனக் பங்களாக்கள் உட்பட பல சொத்துக்கள் மும்பையின் ஜூஹூ பகுதியில் உள்ளன. இவைகளில், அமிதாப் பச்சனும் அவரது மனைவியும் சமீபத்தில் ஆடம்பர பங்களாவான பிரதீக்ஷாவை தங்கள் மகள் ஸ்வேதா நந்தாவுக்கு சமீபத்தில் பரிசளித்தனர்.
ஜனவரியில், அமிதாப் பச்சன் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலுக்கு அருகில் கட்டப்பட உள்ள ஒரு 7-ஸ்டார் கலப்பு-பயன்பாட்டு திட்டத்தில் நிலத்தை வாங்கியுள்ளார்.
டிசம்பரில், மும்பையின் அந்தேரி புறநகரில் உள்ள ஓஷிவாரா பகுதியில் உள்ள வர்த்தக கட்டிடத்தால் தனக்குச் சொந்தமான நான்கு அலுவலக சொத்துக்களை வார்னர் மியூசிக் இந்தியா என்ற இசை பொழுதுபோக்கு நிறுவனத்திற்கு நீண்ட கால ஒப்பந்தத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுத்தார்.
அலிபாக் பகுதியில் தற்போது சச்சின், விராட் கோலி, ரோஹித் சர்மா துவங்கி ரன்வீர் சிங், ஷாருக் கான் மகள், இப்போது அமிதாப் பச்சன் வரையில் தொழிலதிபர்கள், கார்ப்ரேட் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், பிரபல விளையாட்டு வீரர்கள் என பரபலமானர்கள் அதிகளவில் நிலத்தை வாங்கி வருகின்றனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications