வருடத்திற்கு ரூ.60 கோடி வருமானம்.. அமிதாப் பச்சன் சொத்து மதிப்பு இவ்வளவா?

500 ரூபாய் சம்பளத்தில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கிய பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று ரூ.3300 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1999ஆம் ஆண்டு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்ட அமிதாப்பச்சன் தனது அயராத உழைப்பின் மூலம் இன்று மீண்டும் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் உள்ளார்.

அமிதாப்பச்சனின் சொத்து மதிப்பு, அவரிடமுள்ள விலையுயர்ந்த கார்கள் உள்ளிட்ட பொருட்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

 சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்

சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தனது 80வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இதனை அடுத்து 'பச்சன் பேக் டு தி பிகினிங்' என்ற சிறப்பு திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமிதாப்பச்சன் ஒரு வருடத்திற்கு 60 கோடி சம்பாதிக்கிறார் என்றும் அவரது மொத்த சொத்து மதிப்பு 3396 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

அமிதாப்பச்சன் சம்பளம்

அமிதாப்பச்சன் சம்பளம்

அமிதாப்பச்சன் ஒரு திரைப்படத்தில் நடிக்க 6 கோடி சம்பளம் பெறுகிறார் என்றும் அது மட்டுமின்றி பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்காக ஐந்து கோடி ரூபாய் வசூலிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு ஸ்டார்ட்அப் தொழில் நிலையிலும் அவர் பணத்தை முதலீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மும்பையில் நான்கு பங்களாக்கள்

மும்பையில் நான்கு பங்களாக்கள்

அமிதாப்பச்சனுக்கு மும்பையில் நான்கு பங்களாக்கள் உள்ளன. முல்சா, ஜனக், பிரதிக்ஷா, வாட்ஸ் ஆகிய இடங்களில் பங்களாக்கள் உள்ளன. மும்பையின் ஜூஹு பகுதியில் அமைந்துள்ள ஜல்சாவில் உள்ள பங்களாவில் அமிதாப்பச்சன் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். இந்த பங்களாவின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது.

ரூ.4 கோடி மதிப்பில் ஓவியம்

ரூ.4 கோடி மதிப்பில் ஓவியம்

அமிதாப்பச்சனின் பங்களாவில் இருக்கும் 'ஷாஹேன்ஷா' என்ற ஓவியத்தின் விலை ரூ.4 கோடி என கூறப்படுகிறது. மேலும் லெக்ஸஸ், ரோல்ஸ் ராயல் பாண்டம், 2 பிஎம்டபிள்யூ, 3 மெர்சிடிஸ் என அவருக்கு சொந்தமாக மொத்தம் 11 சொகுசு கார்கள் உள்ளது.

ஜெட் விமானம்

ஜெட் விமானம்

இந்தியாவில் சில பிரபலங்களிடம் மட்டுமே ஜெட் விமானம் உள்ளது. அமிதாப்பச்சனும் ஒரு தனியார் ஜெட் விமானத்தையும் வைத்துள்ளார் என்பதும், அதன் விலை ரூ. 260 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 திவாலாகும் நிலை

திவாலாகும் நிலை

நடிகர் அமிதாப்பச்சன் கடந்த 1999ஆம் ஆண்டு உலக அழகி போட்டியை பெங்களூரில் நடத்த ஏராளமான பணத்தை செலவு செய்தார். ஆனால் சில அமைப்புகளின் எதிர்ப்பால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் மிகப்பெரிய நஷ்டத்திற்கு உள்ளான அமிதாப்பச்சன் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது மகன் அபிஷேக்பச்சனின் கல்லூரி படிப்புக்கான கட்டணத்தை கூட அவரால் செலுத்த முடியாத நிலை இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இன்று அமிதாப்பச்சன் 80 வயதிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+