அமிதாப் பச்சன் பேத்தியா இது..!! பாலிவுட் வாடை இல்லாமல் 16 கோடிக்கு அதிபதியானார்..!!

பாலிவுட்டில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்களின் குழந்தைகள் திரைப்படத் துறையில் ஏதாவது ஒரு துறையில் பணியாற்றி வருவது தான் வழக்கம். ஆனால் ஒரு சில குடும்பத்தில் மட்டுமே மீடியா வெளிச்சம், ஸ்டார் வாடை இல்லாமல் வாழ்க்கையை நடத்துபவர்கள் உள்ளனர்.

அந்த வகையில் பாலிவுட்-ன் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தா பாலிவுட் வெளிச்சம் இல்லாமல் ஒரு தொழிலதிபராக தனது சொந்த காலில் நின்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அமிதாப் பச்சன் பேத்தியா இது..!! பாலிவுட் வாடை இல்லாமல் 16 கோடிக்கு அதிபதியானார்..!!

பாலிவுட்டில் நெப்போடிசம் பெரிய விஷயமாக பார்க்கப்படும் வேளையில் நவ்யா நவேலி நந்தா-வின் முயற்சி திரைப்பட துறையை சார்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். அமிதாப் பச்சன் பிஸ்னஸ் உலகிற்கு புதியவர் இல்லை, அவர் ரிலையன்ஸ் முதல் பல ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து பிராண்ட் அம்பாசிட்டராகவும் உள்ளார்.

அமிதாப் பச்சன் மகள் ஸ்வேதா நந்தாவின் மகள் தான் இந்த நவ்யா நவேலி நந்தா, பாலிவுட்டே இவர்கள் கையில் இருக்கும் போது அனைத்து மீடியா வெளிச்சத்தையும் ஓதுக்கிவிட்டு சொந்தமாக பிஸ்னஸ் துவங்க வேண்டும் என்ற முடிவே முக்கியமானது.

நவ்யா நவேலி தற்போது பெண்களின் உடல்நலப் பாதுகாப்பு குறித்த ஆரா ஹெல்த் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நவ்யா நவேலி நந்தா 2020 இல் கல்லூரியில் படிப்பை முடித்து பட்டம் பெற்றார், பட்டம் பெற்ற கையோடு சில முக்கிய முயற்சிகளை செய்து அதன் பின்பு தனக்கான பாதை இதுதான் என முடிவு செய்தார்.

நவ்யா நவேலி தற்போது ஆரா ஹெல்த் என்ற பெண்களை மையமாக கொண்ட சுகாதார தளத்தை (healthcare platform) உருவாக்க முடிவு செய்தார். நவ்யா நவேலி நந்தாவின் ஹெல்த் பிளாட்ஃபார்ம், பெண்களுக்குத் தேவையான சுகாதாரத்தைப் பெற உதவுவதையும், அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தளத்தின் பெயர் தான் Aara Health.

அமிதாப் பச்சன் பேத்தியா இது..!! பாலிவுட் வாடை இல்லாமல் 16 கோடிக்கு அதிபதியானார்..!!

ஆரா ஹெல்த் நிறுவனத்தை தவிர அமிதாப் பச்சனின் பேத்தி, இந்தியாவில் பாலின இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் ப்ராஜெக்ட் நவேலி என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். ஆரா ஹெல்த் நிறுவனத்தை கோவிட் தொற்று நோய் காலத்தின் போது நவ்யா மற்றும் அவரது நண்பர்களால் இணைந்து நிறுவப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ந்த ஆரா ஹெல்த் தற்போது ஆண்டுக்கு கோடிகள் வருவாய் ஈட்டுகிறது என தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவின் சொந்த சொத்து மதிப்பு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது, இது கிட்டதட்ட 16 கோடி ரூபாய் மதிப்பாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+