கொரோனா தொற்று காலத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் மோசமாக இருந்தது, குறிப்பாக ஆடம்பர பிரிவுகளில் வீடு விற்பனை என்பது கூடுதலாகவே பாதிக்கப்பட்டது.
ஆனால் மும்பையில் 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஆடம்பர பிரிவில் அதிகளவிலான வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
ஆடம்பர வீடு
15 முதல் 100 கோடி ரூபாய் பிரிவில் இருக்கும் ஆடம்பர வீடுகளின் விற்பனை எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்துள்ளது. இப்பிரிவில் மட்டும் கடந்த 6 மாதத்தில் மும்பையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
கொரோனா முதல் அலை
கொரோனா முதல் அலையில் இருந்து மீண்ட போது மகாராஷ்டிர அரசு ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு பத்திர பதிவு கட்டணத்தைக் குறைத்தது. இதன் வாயிலாக ஆடம்பர வீடுகள் மீதான மக்களின் மோகம் அதிகரித்து இப்பிரிவில் விற்பனை அதிகரித்துள்ளது.
6 மாத விற்பனை
2021ஆம் நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆடம்பர வீடுகளில் 60 சதவீதம் 15 கோடி ரூபாய்க்கு மேல், மீதமுள்ள 40 சதவீதம் தான் 15 கோடி ரூபாய் அளவீட்டில் உள்ளது. மேலும் இக்கெக்கட்டத்தில் பதிவு செய்யப்படும் வீடுகளுக்குப் பத்திர கட்டணம் வெறும் 2 சதவீதம் மட்டுமே.
பத்திர கட்டணம்
பத்திர கட்டணம் குறைத்தது ஆடம்பர வீடுகளை வாங்க விரும்பியவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று சொல்ல வேண்டும்.
அமிதாப் பச்சன், சன்னி லியோன்
இந்த காலகட்டத்தில் மும்பை நகரின் மிகப்பெரிய பணக்காரர்கள் மற்றும் பிரபலங்களும் ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளனர். அதில் குறிப்பாகா அமிதாப் பச்சன், சன்னி லியோன், அமைச்சர் அசோக் சவான், ஸ்மிதா பாரிக், ஹெச்டிஎப்சி வங்கி முன்னாள் தலைவர் தீபக் பாரிக் ஆகியோர் இக்காலகட்டத்தில் ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications