தினமும் இந்தியர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுப் பொருளாக பால் உள்ளது. பல இந்தியர்கள் காலை ஒரு முறை, 11 மணிக்கு ஒரு முறை, மாலை ஒரு முறை என டீ, காபி குடிக்காமல் தங்கள் பொழுதை கழிப்பதே இல்லை. சிலருக்கு டீ குடிக்காமல் இருந்தால் தங்களுடைய வேலையே ஓடாது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
டீ, காபி விரும்பி குடிக்கும் நபர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. அமுல் நிறுவனம் தனது பால் வெரைட்டிகளில் சிலவற்றுக்கு விலையை ரூ.1 குறைத்துள்ளது. முன்னணி பால் பிராண்டான அமுல், அதன் 3 முக்கிய தயாரிப்புகளான அமுல் கோல்ட், அமுல் தாசா மற்றும் அமுல் டீ ஸ்பெஷல் ஆகியவற்றிற்கு லிட்டருக்கு ரூ.1 விலை குறைப்பை அறிவித்துள்ளது.

அமுல் பலருக்கும் ஃபேவரைட்டான பால் பொருட்களை விற்பனை செய்யும் பிராண்ட். குஜராத் மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் பல்வேறு பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை சுவை, தரம் ஆகியவற்றை அப்படியே பராமரித்து வருவதால் இந்தியாவில் பலரும் விரும்பும் முன்னணி பிராண்டாக மாறியுள்ளது.
தற்போது திருத்தப்பட்ட விலையின்படி, அமுல் கோல்ட் 1 லிட்டர் இப்போது ரூ. 65-க்கும் அமுல் டி ஸ்பெஷல் 1 லிட்டர் ரூ. 61-க்கும், அமுல் தாசா 1 லிட்டர் ரூ. 53-க்கும் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பின் பின்னணியில் நிறுவனம் விரிவான காரணங்கள் எதையும் சொல்லவில்லை என்றாலும்.. அதிகரித்து வரும் சந்தை போட்டிக்கும் மத்தியில் தொழில்துறை வல்லுனர்கள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமுல் கோல்ட் மற்றும் அமுல் தாசாவின் விலையை லிட்டருக்கு ரூ.2 ரூபாய் அமுல் நிறுவனம் உயர்த்தியது. உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் வழங்கும் நடவடிக்கையாக இந்த விலை உயர்வை அறிவித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த இரண்டு பால் வெரைட்டிகளின் விலையை 1 ரூபாய் குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications