இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவனமான ஆமுல், நாடு முழுவதும் 100 'ஆர்கானிக்' உணவுப் பொருட்கள் கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், லாபகரமான 1.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'ஆர்கானிக்' உணவு சந்தையைக் கைப்பற்ற இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அமுல் 'ஆர்கானிக்' கடைகள் பல பகுதிகளில் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆமுல் நிறுவனம், தனது முதல் 'ஆர்கானிக்' உணவுப் பொருட்கள் கடையை டெல்லியின் மயூர் விஹாரில் கடந்த மே மாதம் திறந்து வைத்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தக் கடையைத் திறந்து வைத்தார். அடுத்த ஒரு வருடத்தில் இதுபோன்ற 100 கடைகளை நாடு முழுவதும் திறக்க அமுல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று GCMMF இன் நிர்வாக இயக்குனர் ஜெயன் மேத்தா தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டில் கோதுமை மாவை அறிமுகப்படுத்தி ஆர்கானிக் சந்தையில் ஆமுல் நிறுவனம் கால் பதித்தது. தற்போது, இந்நிறுவனத்தின் ஆர்கானிக் உணவுப் பொருட்கள் பிரிவில் கோதுமை மாவு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, பயித்தம் பருப்பு, ராஜ்மா போன்ற பல்வேறு பருப்பு வகைகள் மற்றும் பாசுமதி, சோனா மசூரி போன்ற வேறுபட்ட வகையான அரிசி வகைகள் உள்ளிட்ட 25 பொருட்கள் உள்ளன.
இந்த ஆர்கானிக் தயாரிப்புகள் சான்றளிக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்றன. அங்கீகாரம் பெற்ற சோதனை ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட ஆலைகளில் இருந்து பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமுல் 'ஆர்கானிக் பொருட்கள்' நியாயமான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதிசெய்யும் வகையில் , அவற்றை மலிவு விலையில் கொடுக்கிறது. மேலும் வரும் நாட்களில் ஆர்கானிக் சர்க்கரை, வெல்லம் மற்றும் தேநீர் போன்ற பல பொருட்களையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இயற்கையான, ரசாயன கலப்படம் இல்லாத உணவுகளின் மீதான நுகர்வோர் ஆர்வம் அதிகரித்து வருவதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்னதான் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ருசிக்க வேண்டும் என்பது பலருக்கு விருப்பமானதாக இருந்தாலும், இன்னும் பலர் ஆர்கானிக் உணவுப் பொருட்களையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனை அடிப்படையாக வைத்து அமுல் நிறுவனம் தற்போது ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
2028-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஆர்கானிக் உணவு சந்தை 4.6 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அமுல் நிறுவனத்தின் இந்த முடிவு அந்நிறுவனத்திற்கு அதிக லாபத்தை பெற்று தரும் என்ற எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் சந்தையில் பல ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பிராண்டுகள் இருப்பதால், அவற்றிற்கு போட்டியாக தற்போது அமுல் நிறுவனமும் களமிறங்கியுள்ளது.
ஆண்டுக்கு ரூ.80,000 கோடி வருவாய் ஈட்டும் அமுல், குஜராத்தின் 36 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமானது. ஆர்கானிக் துறையில் அமுலின் நுழைவு, இந்தியாவில் இயற்கை விவசாயம் மற்றும் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
இயற்கை விவசாயம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும், இது செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை வெகுவாக குறைக்கிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications